தோனி மாதிரி விராட், ரோஹித்துக்கும் அந்த சலுகை கொடுங்க.. அசத்தலன்னா கழற்றி விடுங்க.. எம்எஸ்கே பிரசாத்

MSK prasad
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன் அவர்களை வயதைக் காரணமாக வைத்து கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது.

அதனாலேயே ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் புதிய அணியை உருவாக்கத் தொடங்கியுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் 100% விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை அந்த வாய்ப்பை பிடிக்க வேண்டுமெனில் அவர்கள் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து தங்களை ஃபார்மில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

- Advertisement -

தோனி போல சலுகையைக் கொடுங்க:

அது மட்டுமின்றி விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடி அவர்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டுமென நிறைய முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஓய்வை நெருங்கிய 2018 – 2019 காலகட்டங்களில் தாங்கள் எம்.எஸ். தோனியை உள்ளூரில் விளையாடச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை என்று அப்போதைய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

அதே போன்ற சலுகையை விராட், ரோஹித்துக்கு தற்போதைய தேர்வுக்குழு வழங்க வேண்டுமென பிரசாத் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தியாவுக்கு விளையாடாத சமயங்களில் தோனி உள்ளூரில் விளையாடினார். அதே போல விராட், ரோஹித் தாங்களாக சென்று உள்ளூரில் விளையாடினால் அது அவர்களுடைய மாநில அணிகளில் இருக்கும் இளம் வீரர்களுக்கு உதவும் என்றும் பிரசாத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பிரசாத் கருத்து:

“உள்ளூரில் விளையாட வேண்டும் என்பதை அனைத்து நேரமும் பிரச்சனையாக கொண்டு வருவதில் ஒருவர் கவனத்துடன் இருக்க வேண்டும். நாங்கள் தோனியுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது பற்றி எப்போதும் பேசியதில்லை. அவசியம் என்று உணர்ந்த போதெல்லாம் அவர் உள்ளூரில் விளையாடியுள்ளார். அதே போல உங்களுடைய தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும். அல்லது நன்றாக விளையாடுங்கள் இல்லையேல் கழற்றி விடுவோம் என்ற கொள்கையைப் பின்பற்றுங்கள்”

இதையும் படிங்க: 7 சிக்ஸ் 108 ரன்ஸ்.. 14 வயதில் மற்றொரு வரலாற்று சாதனை படைத்த சூர்யவன்சி.. சயீத் முஸ்டாக் கோப்பையில் அசத்தல்

“அதை விட்டுவிட்டு தெளிவின்மையை பின்பற்றாதீர்கள். இது சம்பந்தமாக நீங்கள் விராட், ரோஹித் போன்ற பெரிய வீரர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. அவர்கள் இளம் வீரர்களை காட்டிலும் நன்றாகவே விளையாடுகிறார்கள். ஒருவேளை அவர்கள் நாட்டுக்காக விளையாடாத போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினால் அது அவர்களுடைய மாநில அணிகளின் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்” என்று கூறினார்.

Advertisement