அடுத்த போட்டியில் அவருக்கு சேன்ஸ் தரலனா அது பெரிய முட்டாள் தனம் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

Ashwin and Ruturaj
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ராஞ்சி நகரில் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடுத்த போட்டியிலும் சேன்ஸ் தரனும் : ரவிச்சந்திரன் அஷ்வின்

இந்நிலையில் இந்த முதலாவது போட்டியின் போது அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் நான்காவது இடத்தில் களமிறங்கி 14 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றத்தை அளித்திருந்தார்.

- Advertisement -

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான வாய்ப்பு கிடைத்த வேளையில் அவர் அதனை பயன்படுத்தி தவறியது ஏமாற்றத்தை அளித்தாலும் இனிவரும் போட்டிகளில் அவர் நிச்சயமாக ரன் குவிப்பார் என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் அடுத்த இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அது நிர்வாகம் எடுக்கும் ஒரு முட்டாள் தனமான முடிவு என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

அடுத்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடவில்லை என்றால் அது நிச்சயம் முட்டாள் தனமான முடிவுதான் என்று கருதுகிறேன். ஏனெனில் எதிர்வரும் இரண்டு போட்டியில் அவருக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே அவர் தன்னுடைய திறனை வெளிப்படுத்த அது அவருக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இதையும் படிங்க : அடுத்த மார்ச் வரைக்கும் தான் உங்களுக்கு டைம்.. கவுதம் கம்பீரின் பதவிக்கு வந்துள்ள சிக்கல் – விவரம் இதோ

அதை விடுத்து திலக் வர்மாவை சேர்க்க சொல்வதெல்லாம் அறிவு சார்ந்த விடயமாக எனக்கு தெரியவில்லை. அதேபோன்று ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக நிதீஷ் ரெட்டியை நிச்சயம் இந்திய அணி பயன்படுத்தலாம். ஹார்டிக் பாண்டியா ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக என்ன செய்தாரோ அதனை நிதீஷ் ரெட்டியாலும் செய்ய முடியும் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement