இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கௌகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் ரிஷப் பண்ட் தலைமையில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களது பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது.
அத்துடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. தற்போது இதையும் சேர்த்து தங்களுடைய 93 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் அடுத்தடுத்த வருடங்களில் வருடங்களில் 2 ஒய்ட்வாஸ் தோல்விகளை சந்தித்து மோசமான சாதனை படைத்துள்ளது.
கூச்சப்படல மன்னிச்சுடுங்க:
இத்தனைக்கும் 2012 முதல் இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டு வந்தது. அப்படிப்பட்ட இந்திய அணி தற்போது சொந்த மண்ணிலையே செல்ஃப் எடுக்க முடியாமல் திண்டாடுவது ரசிகர்களை சோகத்தில் ஆக்கியுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி எதிர்பார்ப்பு நிகராக இல்லை செயல்படவில்லை என்பதை கேப்டன் ரிஷப் பண்ட் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவிக்கும் அவர் இத்த தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு இந்தியா மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் ரிஷப் பண்ட் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கடந்த 2 வாரங்களாக நாங்கள் போதுமான நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்ற உண்மையைச் சொல்ல நாங்கள் கூச்சப்படவில்லை”
கம்பேக் கொடுக்கும்:
“ஒரு அணியாக தனிநபர்களாக நாங்கள் எப்போதும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான இந்தியர்களின் முகத்தில் புன்னகையை கொண்டு வரவே விரும்புகிறோம். மன்னிக்கவும், இம்முறை நாங்கள் எதிர்பார்ப்புக்கு நிகராக விளையாடவில்லை. ஆனால் விளையாட்டு என்பது ஒரு அணியாகவும் தனி நபர்களாகவும் உங்களுக்கு கற்றுக் கொடுத்து உங்களை மாற்றி வளர உதவும்”
இதையும் படிங்க: கம்பீர் திறமையை வேஸ்ட் பண்ணாம.. பிளேயிங் லெவனை இப்படி செலக்ட் பண்ணா ஜெய்க்கலாம்.. பார்திவ் பட்டேல்
“இந்தியாவுக்காக விளையாடுவது எங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவமாகும். இந்த அணியின் திறமை என்ன என்பது எங்களுக்குத் தெரியும். இங்கிருந்து நாங்கள் அணியாகவும் தனிநபர்களாகவும் மீண்டும் ஒன்றிணைந்து, மீண்டும் கவனத்தை செலுத்தி கடினமாக உழைத்து வலுவாக கம்பேக் கொடுப்போம். அசையாத ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி ஜெய்ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.



