கம்பீர் திறமையை வேஸ்ட் பண்ணாம.. பிளேயிங் லெவனை இப்படி செலக்ட் பண்ணா ஜெய்க்கலாம்.. பார்திவ் பட்டேல்

Parthiv Patel
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 2வது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய மோசமான சாதனை தோல்வியை சந்தித்தது. அத்துடன் 25 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியது.

ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் 2012 முதல் இந்தியா தொடர்ந்து 12 வருடங்கள் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டது. அப்படிப்பட்ட இந்திய அணி தற்போது சொந்த மண்ணிலேயே திணறுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

பிரச்சனை என்ன:

இந்நிலையில் இந்திய அணியின் இந்த தோல்விகளுக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆல் ரவுண்டர்கள் மேலே அதிகப்படியான ஆசை வைத்து பிளேயிங் லெவனை தவறாக தேர்ந்தெடுப்பதே காரணம் என்று முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல் விமர்சித்துள்ளார். எனவே திறமையான இந்திய வீரர்களை வீணடிக்காமல் சரியான அணியை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு 6 பேட்ஸ்மேன்கள், 4 பவுலர்கள், 1 ஆல் ரவுண்டர் என்ற அடிப்படையில் அணியை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கே 2 விஷயங்கள் இருக்கின்றது. ஒன்று பயிற்சியாளரின் தவறு. மற்றொன்று வீரர்கள் தங்களது வேலையை சரியாக செய்வது. ஆனால் முதலில் நாம் சரியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கிறோமா? என்பது கேள்வியாகும்”

- Advertisement -

பார்த்திவ் பட்டேல் கோரிக்கை:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு இவ்வளவு ஆல் ரவுண்டர்கள் தேவையா? டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்வதற்கு ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேவை என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு 6 பேட்ஸ்மேன்கள் தேவை. நம்மிடம் 40க்கும் மேற்பட்ட சராசரியைக் கொண்ட விக்கெட் கீப்பர் (ரிஷப் பண்ட்) இருக்கிறார் என்பது நல்ல விஷயமாகும். அடுத்ததாக உங்களுக்கு 4 பவுலர்கள், 1 ஆல் ரவுண்டர் தேவை”

இதையும் படிங்க: ஒரு காலத்துல பயத்தை கொடுத்த இந்தியாவை இப்படி பயப்பட வெச்சுட்டீங்களே.. மாற்றம் வேணும்.. டிகே

“இங்கேயும் நமக்கு ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகிய தரமான ஆல் ரவுண்டர்கள் ஆசிர்வாதமாக கிடைத்துள்ளார்கள். கூடவே குல்தீப் யாதவ் போன்ற திறமையான மணிக்கட்டு ஸ்பின்னர் இருக்கிறார். இறுதியாக உங்களுக்கு 2 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. ஒருவேளை பிட்ச் பச்சையாக இருந்தால் எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் தேவை. அதனால் நித்திஷ் ரெட்டி போன்ற எக்ஸ்ட்ரா ஆல் ரவுண்டர் தேவையில்லை. இந்திய அணி இப்படி மாற்றி சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement