தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா ஒய்ட்வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் 25 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது. அத்தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 15 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்தது.
அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் 408 ரன்கள் இந்தியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா ஒயிட்வாஷ் வெற்றியை பெற்றது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றிக்கு 2வது போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சைமன் ஹார்மர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
10 வருட காத்திருப்பு:
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா தோல்வியை சந்தித்தது. அப்போதிலிருந்து இந்தியாவில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைக்க வேண்டுமென்று காத்திருந்ததாக சைமன் கூறியுள்ளார். அதை தற்போது செய்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் அவர் அதற்காக பின்பற்றிய திட்டங்கள் பற்றி பேசியது பின்வருமாறு.
“இந்த நீண்ட சாலையில் 10 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட தற்போது வித்தியாசமான உணர்வு கிடைத்துள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் இம்முறை இந்தியாவில் விருப்பமான நினைவுகளை விட்டுச் செல்வேன். இந்த இந்திய அணிக்கு எதிராக வெற்றிக்கோட்டை தாண்டுவதற்கு ஒரு அணியாக நீங்கள் நரகத்திற்கு மேலான முயற்சியைப் போட வேண்டும்”
ஆட்டநாயகன் சைமன்:
“2வது இன்னிங்ஸில் இந்தியா பவுலிங் செய்த போது 40 ஓவர்களுக்குப்பின் பந்து எப்படி இருக்கிறது என்பதை நான் பார்த்தேன். பிட்ச்சில் கால் தடங்கலால் ஏற்பட்ட சிதைவு, ரிஷப் பண்ட் அவுட்டான விதம் ஆகியவை பிட்ச் எப்படி இருந்தது என்பதைக் காண்பித்தது. ஒரு வழியாக இம்முறை இந்தியாவில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணி தங்களுடைய உயிருக்கு நிகராக இன்று பேட்டிங் செய்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்”
இதையும் படிங்க: இந்தியா 2026 டி20 உ.கோ வெல்வதை டிவில பாப்பேன்.. கிடைக்காத கௌரவத்தை கொடுத்த அவருக்கு நன்றி.. ரோஹித் பேட்டி
“எனக்காக மார்க்ரம், மார்கோ யான்சென் ஆகியோர் கூர்மையான கேட்சுகள் பிடித்தார்கள். இப்போது நாங்கள் கொண்டாடுவதற்காக காத்திருக்கிறோம். வீட்டுக்குச் செல்லும் போது கேசவ் மகாராஜ் எங்கள் நம்பர் ஒன் ஸ்பின்னராக இருப்பார். நான் 2வது ஸ்பின்னராக இருப்பதில் மகிழ்ச்சி. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நான் முன்னேறுவதற்கு முயற்சி செய்வேன்” என்று கூறினார்.



