அடம் பிடிக்காம மூளையை யூஸ் பண்ணி.. இதை செய்யலன்னா ஜெய்க்க முடியாது.. இங்கிலாந்தை சாடிய வாகன்

Micheal Vaughan 2
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்கள் அடித்தது. அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை 132 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 40 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதனால் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்திய இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் 205 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியாவை டிராவிஸ் ஹெட் 123 (83) ரன்கள் விளாசி எளிதாக வெற்றி பெற வைத்தார். அதனால் 28.2 ஓவரில் வென்ற ஆஸ்திரேலியா பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்துக்கு உண்மையான அதிரடியைக் காட்டியது என்றே சொல்லலாம்.

- Advertisement -

அடம் பிடிக்கும் இங்கிலாந்து:

இந்நிலையில் பஸ்பால் என்ற பெயரில் ஒரே மாதிரியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றுவதை இங்கிலாந்து அடம் பிடிக்காமல் விட வேண்டுமென்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். மேலும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாவிட்டால் ஆஸ்திரேலியாவில் இம்முறையும் இங்கிலாந்து வெற்றி பெற முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ஸ்டார்க் போன்ற உலகத்தரமான பவுலருக்கு எதிராக ஏன் இந்த இங்கிலாந்து அணி நிறைய ஷாட்டுகளை அடித்தது? என்று நான் ஆச்சரியப்படுகிறேன். ஸ்டார்க் சில நல்ல பந்துகளை வீசினார். ஆனால் அதை விட இங்கிலாந்து அணி நிறைய தவறுகளை செய்தது. இப்படி ஒரே மாதிரியாக விளையாடினால் ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்தால் வெற்றி பெற முடியாது”

- Advertisement -

மூளையை யூஸ் பண்ணுங்க:

“நீங்கள் இப்படி அதிரடியாக, அதிகப்படியான ரிஸ்க் எடுத்தும் ஸ்டைலில் விளையாடினால் ஆஸ்திரேலியா கண்டத்தில் வெல்ல முடியாது. நீங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் கியரை மேலும் கீழும் மாற்றியமைத்து விளையாடும் ஸ்டைலை விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே விரிவாக கவர் ட்ரைவ்களை அடிக்க முடியாது. அதனாலேயே இங்கிலாந்து இந்த நிலையில் இருக்கிறது. முதல் 2 நாட்கள் நாம் அரச முறையில் ரசிகர்களைப் பொழுது போக்குகிறோம்”

இதையும் படிங்க: 80 ரன்ஸ்.. டி20யில் டெஸ்ட் ஆடிய பாபர்.. இலங்கைக்கு எதிராக ஃபர்ஹான் 17 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை

“ஆனால் அது 4 நாட்களில் இருக்க வேண்டும். 2 நாட்களில் அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் நீங்கள் 67 ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்வது போதுமானதல்ல. இந்த இங்கிலாந்து அணியிடம் போட்டியைக் கொடுப்பதற்கான கருவிகள் உள்ளது. ஆனால் அதற்கு உங்களது மூளையைப் பயன்படுத்தாவிட்டால் போட்டியைக் கொடுக்க முடியாது. நீங்கள் ஒரே ஒரு வழியில் மட்டும் விளையாட முடியாது. இந்த வாரம் பேட்டிங்கில் செய்த தவறுகளைப் பற்றி இங்கிலாந்து அணியினர் உட்கார்ந்து பேசாவிட்டால் தொடர்ந்து அடி வாங்குவார்கள். அவர்கள் என்ன தவறாக சென்றது என்பதிலிருந்து கற்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement