தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.
சாய் சுதர்சனுக்கு இந்த இடம் செட்டாகாது : சவுரவ் கங்குலி
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி கெளஹாத்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போது மூன்றாவது இடத்தில் விளையாடி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது இடத்தில் விளையாடியது பலரது மத்தியிலும் பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியது.
ஆனாலும் வாஷிங்டன் சுந்தர் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் முதல் இன்னிங்சில் 29 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 31 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாம் இடத்தில் அவர் விளையாடுவது அணிக்கு செட்டாகாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் ஒரு நல்ல கிரிக்கெட்டர் தான் அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அவர் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடும் வீரர் அல்ல. ஏனெனில் அவர் மிகச் சிறப்பான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்.
அதனால் தான் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். என்னை பொருத்தவரை டெஸ்ட் போட்டிகளில் முதல் ஐந்து இடங்களில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும். பின் வரிசையில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம். அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் ஒரு முழுநேர பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது தான் தவறு என்று கருதுகிறேன்.
இதையும் படிங்க : இந்திய அணி அந்த ஈகோவை விடனும்.. இனியாச்சும் கம்பீர் அவங்க மேல ஆசைப்படக்கூடாது.. கவாஸ்கர் அறிவுரை
வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு எந்த ஒரு மைதானத்திலும் 20 முதல் 30 ஓவர்கள் வரை பந்துவீச அனுமதிக்கலாம். அதேபோன்று பேட்டிங்கிலும் அவரால் பெரிய அளவில் கை கொடுக்க முடிகிறது என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.



