இந்த பிட்ச்சில் நான் கூட விக்கெட்ஸ் எடுப்பேன்.. இந்தியாவின் தோல்விக்கு தவறான செலக்சனே காரணம்.. ஸ்ரீகாந்த்

K Srikkanth 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இத்தனைக்கும் அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 30 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அதீத சுழலுக்கு சாதகமாக மாறிய கொல்கத்தா பிட்ச்சில் இந்தியா வெறும் 124 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பரிதாபமாக தோற்றது.

அதனால் தென்னாபிரிக்காவிடம் 15 வருடங்கள் கழித்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்களே முக்கிய காரணமானது. ஆனால் அதிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

தவறான பிட்ச் – செலக்சன்:

ஏனெனில் கொல்கத்தாவில் இப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். இந்நிலையில் தாம் பந்து வீசினால் கூட விக்கெட் விழும் அளவுக்கு கொல்கத்தா பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததாக முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அப்படிப்பட்ட பிட்ச்சை அமைத்ததே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சாய் சுதர்சனை கழற்றி விட்டு வாஷிங்டன் சுந்தரை 3வது இடத்தில் விளையாட வைத்ததும் தவறு என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “அந்த பிட்ச் மிகவும் மோசமானது. ஆனால் அதில் பேய் எதுவுமில்லை என்று போட்டியின் முடிவில் கௌதம் கம்பீர் சொல்கிறார். உண்மையில் அது மோசமான பிட்ச். ஏனெனில் ஒரு போட்டி 2.5 நாட்களில் முடிந்தால் அந்த பிட்ச்சில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்”

- Advertisement -

ஸ்ரீகாந்த் விளாசல்:

“இது போன்ற சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இந்தியாவை பின்னங்கால் வைக்க வைக்கும். அங்கே ஸ்கோரை பாருங்கள் 159, 189, 153, 89. பும்ரா முதல் நாளிலேயே மார்க்ரமை அவுட்டாக்கிய பந்து அவரது தலைக்குச் சென்றது. மேலும் கீழமாக சென்ற பந்துகள் ஸ்பின்னர்களுக்கு சதுர வடிவில் திரும்பின. எனவே இது போன்ற பிட்ச்சில் ஸ்டம்ப் லைனில் பந்துகளைப் போட்டால் நான் கூட விக்கெட்டுகளை எடுப்பேன்”

இதையும் படிங்க: இதை செஞ்சுருந்தா ஈஸியா 124 அடிச்சுருக்கலாம்.. மாஸ்டர் இந்தியா அந்த கலையை மறந்துட்டாங்க.. பதான் கவலை

“இந்திய அணி விளையாட வைத்த 4 ஸ்பின்னர்களில் ஒருவர் (சுந்தர்) இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு பந்தை கூட வீசவில்லை. இருப்பினும் 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சுந்தரை தேர்ந்தெடுத்து 3வது இடத்தில் விளையாட வைப்பதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் அவருக்கு பவுலிங் வழங்காதது மோசமான தேர்வு” என்று கூறினார்.

Advertisement