எதிர்வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கக் கூடிய வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
2026 ஐ.பி.எல் தொடருக்கான சி.எஸ்.கே கேப்டன் அறிவிப்பு :
அந்த வகையில் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளை சேர்த்த நிர்வாகங்களும் தாங்கள் ரிலீஸ் செய்த வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அந்த வகையில் வெளியான பட்டியலின் அடிப்படையில் பல்வேறு சுவாரஸ்யமான மாற்றங்கள் அனைத்து அணிகளிலுமே நடைபெற்றுள்ளன.
இப்படி முக்கிய அணிகளில் பலவீரர்கள் நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக 11 பேரை விடுவித்து அதிரடி காட்டியுள்ளது.
குறிப்பாக சென்னை அணியில் இருந்து ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கரன், மத்தீஷா பதிரானா ஜடேஜா போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டு சென்னை அணியின் கைவசம் 43.40 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இதன் காரணமாக மிகப்பெரிய தொகையுடன் மினி ஏலத்திற்கு செல்லும் சென்னை அணி பல்வேறு வீரர்களை குறி வைத்து ஏலத்தில் எடுக்க காத்திருக்கிறது.
இந்நிலையில் அடுத்த 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான சி.எஸ்.கே கேப்டன் யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக ஏலத்துக்கு முன்னதாக டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டதால் அவர் சி.எஸ்.கே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : ஸ்டூவர்ட் பிராடுக்கு அடுத்து 2 ஆவது சர்வதேச வீரராக டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா நிகழ்த்திய – அசத்தல் சாதனை
ஆனால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் தான் கேப்டனாக செயல்படவுள்ளார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 2025 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ருதுராஜ் பாதியிலேயே விலகிய வேளையில் மீதமுள்ள தொடரில் தோனி கேப்டனாக இருந்தார். இந்நிலையில் மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட்டின் கைகளுக்கு கேப்டன் பதவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



