நீங்க என்னதான் நெனச்சிட்டு இருக்கீங்க.. சாய் சுதர்சன் நீக்கம் குறித்து நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய – ஆகாஷ் சோப்ரா

Chopra and Sai
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக துவங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் திடீரென கழட்டி விடப்பட்டது பலரது மத்தியிலும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாய் சுதர்சனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்து அவருக்கு மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாய் சுதர்சன் விடயத்தில் நிர்வாகம் செய்தது தவறு : ஆகாஷ் சோப்ரா

இப்படி ஒரு திடீர் முடிவு நிர்வாகத்திடம் இருந்து வந்தது பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் போன்ற மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்க கூடுதலாக நான்காவது சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது.

- Advertisement -

அதோடு இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களையும் சேர்த்து 6 பவுலர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இப்படி ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் வெறும் 5 பேட்ஸ்மேன்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முழுநேர பேட்ஸ்மேனை கழட்டிவிட்டு ஆல்ரவுண்டரை கொண்டு வந்தது தவறு என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சாய் சுதர்சன் நீக்கப்பட்டதற்கு பிறகு இந்திய அணியின் நிர்வாகத்தை சாடி கடுமையான சில விமர்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சாய் சுதர்சன் கடைசியாக விளையாடிய இன்னிங்ஸ்சில் 87 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அதன் காரணமாகவே தற்போது இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார். ஆனால் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் அவரை ஏன் அணியில் சேர்த்தீர்கள்? ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அவரை அணியில் இருந்து நீக்கியிருக்கலாம். அதை விடுத்து ஒரு வீரர் நல்ல பார்மை வெளிப்படுத்தியும் இப்படி திடீரென நீக்கியது தவறு.

இதையும் படிங்க : வாக்கு குடுத்து இப்படி ஏமாற்றினால் சாய் சுதர்சனின் நம்பிக்கை போயிடும் – சஞ்சய் பாங்கர் கருத்து

நன்றாக செயல்பட்டு கொண்டிருந்த ஒரு வீரரை யூஸ் லெஸ் என்ற மாற்றிவிட்டது போல் இந்த நீக்கம் இருக்கிறது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் சாய் சுதர்சன் இப்படி திடீரென ஒரே ஒரு ஆட்டத்துடன் நீக்கப்பட்டால் அது அவரது நம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement