இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருவதை போன்று பல்வேறு நாடுகளிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தென்னாப்பிரிக்கா நாட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு எஸ்.ஏ டி20 லீக் என்ற தொடரானது அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 2023, 2024, 2025 என மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
உலகிலேயே கடினமான பவுலர் இவர்தான் : டூபிளெஸ்ஸிஸ் கருத்து
இந்த தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோகன்னஸ் சூப்பர் கிங்ஸ், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேபிட்டல்ஸ், எம்.ஐ கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த ஆறு அணிகளையும் ஐபிஎல் அணிகளை சேர்ந்த நிர்வாகங்களே விலைக்கு வாங்கி போட்டிகளையும் நடத்தி வருகின்றன.
கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன்கேப் அணியும், இந்த ஆண்டு நடைபெற்ற 2025 டி20 தொடரை எம்.ஐ கேப்டன் அணியும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மூன்று சீசன்களுக்கு அடுத்து நான்காவது சீசனானது அடுத்த ஆண்டு 2026-இல் நடைபெறவுள்ளது. இந்த எஸ்.ஏ டி20 லீக்கில் தென்னாப்பிரிக்க வீரர்களுடன் பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் விளையாடி வருவதால் இந்த தொடரானது தற்போது படிப்படியாக ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த தொடரில் இந்திய வீரர்களும் இணைந்தால் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் ஏற்படுவது மட்டுமின்றி பார்வையாளர்கள் கவனத்தை ஈர்க்கும் என்பதனால் ஓய்வுபெற்ற இந்திய வீரர்களை எஸ்.ஏ டி20 லீக்கில் விளையாட பல்வேறு முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்களும் அழைப்பு விடுத்து வருகின்றனர். அந்தவகையில் ஜோகன்னஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் பாப் டூப்ளிசிஸ் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள எஸ்.ஏ டி20 லீக் தொடர் குறித்து சில ஜாலியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் தென்னாப்பிரிக்க நாட்டில் எந்த ஒரு இந்திய வீரர் எஸ்.ஏ டி20 லீக்கில் விளையாடக்கூடாது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில் : நான் எஸ்.ஏ டி20 லீக்கில் பும்ரா மட்டும் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அவர் உலகிலேயே மிகவும் கடினமான பவுலர். அவருக்கு எதிராக விளையாடுவது என்பது மிக கடினம் என்பதால் அவர் மட்டும் அந்த தொடரில் விளையாட வேண்டாம் என்று விரும்புவதாக ஜாலியாக பதிலளித்தார்.
இதையும் படிங்க : ஜடேஜா வேணாம்.. தெ.ஆ டெஸ்ட் தொடரில் இவரை 6 ஆவது இடத்தில் களமிறக்குங்க – புஜாரா விருப்பம்
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் பும்ராவுக்கு எதிராக பலமுறை விளையாடியுள்ளார். அப்படி அவர் விளையாடிய போது பும்ராவுக்கு எதிராக சிரமத்தை சந்தித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் அவ்வாறு நகைச்சுவையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



