பி.சி.சி.ஐ-யின் வேண்டுகோளை ஏற்று முக்கிய முடிவை கையிலெடுத்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit Sharma
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். தற்போது 38 வயதாகும் ரோகித் சர்மா அடுத்த 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று ஏற்கனவே தனது விருப்பத்தை அறிவித்துவிட்டு தொடர்ச்சியாக இந்திய அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

பி.சி.சி.ஐ-யின் வேண்டுகோளை ஏற்ற ரோஹித் சர்மா :

ஆனாலும் அவரது வயது மூப்பு மற்றும் ஒரே ஃபார்மேட்டில் விளையாடுவதன் காரணமாகவும் அவரது எதிர்காலம் இந்திய அணியில் அவ்வப்போது கேள்விகளை எழுப்பி வருகிறது. இருந்தாலும் பல சலசலப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரிடத்திலும் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ச்சியாக இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டுமெனில் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அவர்களிடம் காட்டமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் வேண்டுகோளை ஏற்றுள்ள ரோகித் சர்மா மும்பை அணிக்காக வரவிருக்கும் விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் விளையாட சம்பந்தம் தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய் ஹசாரே தொடர் மட்டுமின்றி சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் கூட தான் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இருந்தாலும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் நடைபெறும் போது இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடர் இருப்பதால் ரோகித் சர்மா அந்த தொடரில் தான் பங்கேற்பார். எனவே சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என்பது உறுதி.

இதையும் படிங்க : உங்க சொந்த மைதானமா எங்க ஊருக்கு வந்து விளையாடுங்க.. சாம்பியன் ஆர்.சி.பி வந்துள்ள அழைப்பு – விவரம் இதோ

அதேவேளையில் நிச்சயம் எதிர்வரும் விஜய் ஹசாரே தொடரில் ரோஹித் சர்மா இடம்பெற்று விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது. அதே வேளையில் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து எந்தவித தெளிவான முடிவை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement