ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியானது நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன்படி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களை எடுத்தபோது மழை குறுக்கிட்டது.
அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை :
இதன் காரணமாக போட்டி சில மணி நேரங்கள் வரை தடைபட்ட நிலையில் அதன் பின்னர் போட்டி தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணியானது இந்த தொடரை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது.
அதோடு இந்த தொடரின் நாயகனாக அபிஷேக் ஷர்மாவும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியின் போது துவக்க வீரர்களாக களமிறங்கி 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய அணியை சேர்ந்த துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரது ஜோடி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர்.
அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஆஸ்திரேலிய அணி மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஜோடி எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்களை அடித்த ஜோடியாக தற்போது 188 ரன்களுடன் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரது ஜோடி முதலிடம் பிடித்துள்ளது.
இவர்களுக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கை அணியை சேர்ந்த டேவால்டு பிரேவிஸ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரது ஜோடி இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே டி20 தொடரில் ஜோடியாக 187 ரன்களை குவித்திருந்த வேளையில் அவர்களது சாதனையை தற்போது சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முறியடித்துள்ளனர்.
இதையும் படிங்க : இப்படி நடந்து அவுட்டானாலும் அபிஷேக் சர்மாவை திட்டாதீங்க.. அதான் அவரோட ஸ்டைல் – பார்த்திவ் படேல் கருத்து
அதோடு மட்டுமன்றி இந்த போட்டியில் 11 ரன்களை கடந்த அபிஷேக்சர்மா விராட் கோலிக்கு அடுத்து குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரராகவும், சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரராகவும் உலக சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.



