ரசிகர்களின் கோரிக்கையுடன்.. எனக்காக ஜெய் ஷா ரூல்ஸை மாற்றி மெடல் தந்தாரு.. பிரதிகா மகிழ்ச்சி

Pratika Rawal
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த இந்தியா வாழ்வா – சாவா போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அப்போட்டியில் துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் சதத்தை அடித்து இந்தியா செமி ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அடுத்ததாக நடைப்பெற்ற செமி ஃபைனலில் 7 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்குச் சென்றது. அடுத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று புதிய சரித்திரம் படைத்தது. அந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

ரூல்ஸை மாற்றிய ஜெய் ஷா:

அந்த வெற்றியை வீல் சேரில் வந்து பிரதிகா ராவல் கொண்டாடியது வைரலானது. வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஃபீல்டிங் செய்த அவர் பலத்த காயத்தை சந்தித்ததால் மேற்கொண்டு விளையாட முடியாமல் வெளியேறினார். அவருக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷபாலி வர்மா இறுதிப் போட்டியில் ஆட்டநாயகி விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்தது வேறு கதை.

கடைசியில் மாற்று வீராங்கனையாக ஷபாலி தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிரதிகா ராவலுக்கு “வின்னர்” மெடல் வழங்கப்படவில்லை. பொதுவாக ஐசிசி தொடரில் தேர்ந்தெடுக்கப்படும் 15 நபர்களுக்கு மட்டுமே மெடல் வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். அதனால் 2003 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லஸ்பி முதல் பிரதிகா ராவல் வரை வெற்றியில் பங்காற்றியும் காயத்தால் வெளியேறியதால் நிறைய கிரிகெட்டர்களுக்கு மெடல் கிடைக்கவில்லை.

- Advertisement -

ராவல் மகிழ்ச்சி:

எனவே அந்த விதிமுறை மாற்றப்பட வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ரசிகர்கள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விதிமுறையை மாற்றிய ஐசிசி தலைவர் ஜெய் ஷா தமக்கு வெற்றியாளர் மெடல் கொடுத்துள்ளதாக ராவல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு. “பிரதிகாவுக்கு மெடல் வழங்குவதற்கான வேலைகளை செய்துள்ளதாக ஜெய் ஷா சார் எங்கள் அணி மேனேஜருக்கு மெசேஜ் செய்தார்”

இதையும் படிங்க: மீண்டும் துவங்கிய பேச்சுவார்த்தை.. சி.எஸ்.கே அணிக்குள் வரும் சஞ்சு சாம்சன் – வெளியேறப்போவது யார்?

“எனவே ஒரு வழியாக இப்போது என்னுடைய சொந்த மெடல் என்னிடம் இருக்கிறது. அதை முதல் முறையாக திறந்து பார்த்த போது நான் அழுது விட்டேன். பொதுவாக நான் அழக்கூடிய நபர் கிடையாது. ஆனால் அந்த உணர்வு உண்மையானது. பிரதமரை பார்த்த போது எங்களது ஒரு பயிற்சியாளரின் மெடலை அணிந்திருந்தேன். ஆனால் தற்போது ஜெய் சார் எனக்கு மெடலை அனுப்பியுள்ளார்” என்று கூறினார்.

Advertisement