அவங்க 2 பேர் இருந்தும் சுப்மன் கில் டி20 அணிக்கு தேவையா? மெதுவான ஆட்டத்தால் – ரசிகர்கள் விளாசல்

Shubman Gill
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று கோல்டு கோஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள கடைசி ஆட்டம் நடைபெற இருக்கிறது.

அவங்க 2 பேர் இருக்கும் போது சுப்மன் கில் தேவையா? : ரசிகர்கள் விளாசல்

இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி என்னதான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில்லின் மெதுவான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த நான்காவது போட்டியில் விளையாடிய சுப்மன் கில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் அடித்திருந்தாலும் 39 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் (117.95) 46 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தார். இப்படி சுப்மன் கில் பொறுமையாக ஆடியது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாகவே டி20 போட்டிகளில் துவக்க வீரராக 165+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் ஜெய்ஸ்வால் மற்றும் 180+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் ஆகியோரை வெளியில் அமர வைத்துவிட்டு 140 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்து பொறுமையாக ஆடும் சுப்மன் கில்லுக்கு ஏன் வாய்ப்பு வழங்கி வருகிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

அதோடு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் மட்டுமே அவர் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய வருகிறார் என்றும் அப்படி ஒரு பதவி அவருக்கு இல்லையெனில் நிச்சயம் கடந்த 10 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்த அவர் வெளியேற்றப்பட்டு ஜெய்ஸ்வால் அல்லது சாம்சன் ஆகியோரில் ஒருவர் நிச்சயம் இடம் பிடித்திருப்பார்கள் என்றும் அவரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக இப்படி ஒரு மோசமான தோல்வியை நாங்கள் சந்திக்க இதுவே காரணம் – மிட்சல் மார்ஷ் வருத்தம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை மறுதினம் நவம்பர் 8-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement