நாளைய 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை நவம்பர் 6-ஆம் தேதி கோல்டு கோஸ்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் முன்னிலை பெறும் என்பதால் இரு அணிகளுக்குமே இது முக்கிய போட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

ஆனால் கடந்த மூன்றாவது போட்டியின் போது இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால் நான்காவது போட்டியில் எவ்வித மாற்றமும் இன்றி அதே அணியே விளையாடும் என்று தெரிகிறது. அந்த வகையில் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடம்பெறுவார்கள். மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவும் இடம் பெறுவார்கள்.

- Advertisement -

அதே போன்று ஐந்தாவது இடத்தில் ஜிதேஷ் சர்மாவும், ஆறாவது இடத்தில் ஷிவம் துபேவும், ஏழாவது இடத்தில் அச்சர் பட்டேல், எட்டாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெறுவார்கள். ஒன்பதாவது இடத்தில் வருண் சக்கரவர்த்தியும், 10 மற்றும் 11-வது இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரும் விளையாடுவார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : எதுவுமே 1983க்கு ஈடாகாது.. ஆனா இந்த வெற்றி இந்தியாவில் அதுல மறுமலர்ச்சியை உண்டாக்கும்.. கவாஸ்கர் பேட்டி

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஜிதேஷ் சர்மா, 6) அக்சர் படேல், 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) வருண் சக்கரவர்த்தி, 10) அர்ஷ்தீப் சிங், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement