இந்தியாவுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தி.. கடைசி 2 டி20யிலிருந்து டிராவிஸ் ஹெட் விலகல்.. வெளியான அறிவிப்பு

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை சமன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது.

இதைத் தொடர்ந்து 4வது டி20 நவம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் உள்ள கராரா மைதானத்தில் நடைபெற உள்ளது. அப்போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறுவதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் விலகுவதாக ஆஸ்திரேலியா வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் விலகல்:

2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவை அடித்து நொறுக்கிய அவர் ஒரே வருடத்தில் ஆஸ்திரேலியா 2 ஐசிசி கோப்பைகளை வெல்ல உதவியதை மறக்க முடியாது. கடந்த டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை பந்தாடிய அவர் 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல உதவினார். அப்படிப்பட்ட அவர் அடுத்ததாக நடைபெறும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளார்.

இன்னும் 2 வாரத்தில் துவங்க உள்ள அத்தொடருக்கு தயாராகும் வகையில் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டெஸ்ட் தொடரான ஷீல்ட் தொடரில் விளையாட உள்ளார். குறிப்பாக நவம்பர் 10ஆம் தேதி துவங்கும் டாஸ்மானியாவுக்கு எதிரான போட்டியில் அவரும் அலெக்ஸ் கேரியும் தெற்கு ஆஸ்த்ரேலியா அணிக்காக விளையாட உள்ளனர். அதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் ஹெட் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மகிழ்ச்சி செய்தி:

இந்த செய்தி இந்திய அணிக்கு சாதகமாகவும் இந்திய பவுலர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட்டும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் 3வது போட்டிக்கு முன்பே விலகினார். அவர் விலகிய அடுத்தப் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா தொடரை சமன் செய்து அசத்தியது.

இதையும் படிங்க: ஒரு வெப் சீரியஸாக, 8 எபிசோடுகளாக இந்த வெற்றி கொண்டாப்பட வேண்டும் – ரவிச்சந்திரன் அஷ்வின் வேண்டுகோள்

அதே போல ஹெட் விலகியுள்ளது ஆஸ்திரேலியாவுக்கு பாதகமாகவும் இந்தியாவுக்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது. இது ஒரு புறமிருக்க இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் குல்தீப் யாதவ் கடைசி 2 ஆஸ்திரேலியா டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று இந்திய அணியும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement