ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நவம்பர் 2-ஆம் தேதி நேற்று ஹோபர்ட் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன் காரணமாக ஏற்கனவே ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் வெற்றியை பெற்று இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
வாஷிங்க்டன் சுந்தர் தன்னை நிரூபித்து விட்டார் : இர்பான் பதான்
இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததும் பல்வேறு விமர்சனங்களுக்கு எழுந்தன. ஆனால் மூன்றாவது போட்டியின் போது சரியான மாற்றங்களை கொண்டு வந்த இந்திய அணியும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
நேற்றைய இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 49 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த ஆட்டம் 187 ரன்கள் என்கிற இலக்கினை சேசிங் செய்ய உதவியது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் வாழ்த்தி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் தற்போது ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி20 போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். பவுலிங் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் தான் ஏன் டாப் ஆர்டரில் விளையாட தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார். நேற்று ஷார்ட் பிட்ச் பந்தை அவர் விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது.
இதையும் படிங்க : ஷிவம் துபே விடயத்தில் இந்திய அணி செய்வது ரொம்ப தவறு.. அவருக்கு தெளிவான விளக்கம் கொடுக்கனும் – ஜாஹீர் கான்
அவரது இந்த திறமையை பார்க்கும்போது நிச்சயம் அவர் டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் அதிரடியாக விளையாடும் திறன் இல்லாதது போல் தெரிந்த வாஷிங்டன் சுந்தர் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியிடமிருந்து வெற்றியை பறித்துக் கொடுத்துள்ளார் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



