இது என்னடா புதுசா இருக்கு? கம்பேக் கொடுத்த போட்டியில் ஜெர்சியால் கவனத்தை ஈர்த்த பண்ட் – என்ன நடந்தது?

Virat and Pant
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த பல வாரங்களாக சிகிச்சையில் இருந்த பின்னர் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் தற்போது தென்னாப்பிரிக்க ஏ அணியானது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் இந்திய ஏ அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் ரிஷப் பண்ட் :

தென்னாப்பிரிக்க ஏ அணியானது இந்தியா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது அக்டோபர் 30ஆம் தேதியான இன்று பெங்களூரில் உள்ள பிசிசிஐ பயிற்சி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய ஏ அணியை அவர் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய ஏ அணிக்காக களமிறங்கியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் எவ்வாறு செயல்படப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தயிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய ஏ அணிக்கு கேப்டனாக திரும்பியதோடு மட்டுமின்றி அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் இன்றைய போட்டியின் போது பதினெட்டாம் நம்பர் ஜெர்சி அணிந்து ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். இந்த விடயம் தான் தற்போது அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 18-ஆம் நம்பர் ஜெர்சி அணிந்து விளையாடி வரும் வேளையில் தற்போது ரிஷப் பண்ட் 18-ஆம் நம்பர் ஜெர்சி அணிந்து விளையாடி வருவது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : எப்படி ரேங்க் போடுறாங்கனு தெரியல.. ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தது குறித்து – தினேஷ் கார்த்திக் கருத்து

ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் வேளையில் இன்னும் சில ஆண்டுகளில் அவர் ஓய்வுபெற வாய்ப்புள்ளது. அப்படி விராட் கோலி ஓய்வு பெற்ற பின்னர் அந்த 18-ஆம் நம்பர் ஜெர்சியை தொடர வேண்டும் என்பதற்காகவே ரிஷப் பண்ட் இந்த தொடரில் அந்த ஜெர்சியை பயன்படுத்துகிறாரோ என்று தோன்றுகிறது.

Advertisement