யுவ்ராஜ் சிங்கின் இந்திய ஜெர்ஸியை.. ஸ்டுவர்ட் ப்ராட் குப்பை தொட்டியில் வீசிட்டாரு.. அப்பா ப்ராட் பேட்டி

Chris Broad 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் உலகக் கோப்பை நாயகனாக அறியப்படுகிறார். 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் வெல்ல உதவிய அவர் 2007 டி20 உலகக் கோப்பையையும் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர். அத்தொடரில் இங்கிலாந்து எதிரான போட்டியில் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் தேவையின்றி அவரை வம்பிழுத்தார்.

அதற்கு பதிலடியாக ஸ்டுவர்ட் ஃப்ராடை அடித்து நொறுக்கிய யுவராஜ் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரராக யுவ்ராஜ் உலக சாதனை படைத்தார். அத்துடன் 12 பந்தில் அதிவேகமான அரை சதத்தை அடித்த வீரராகவும் அவர் உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

யுவ்ராஜ் பரிசு:

மறுபுறம் அவரிடம் அடி வாங்கிய ஸ்டுவர்ட் ப்ராட் கேரியர் முடிந்ததாக அனைவரும் கருதினார்கள். இருப்பினும் அதற்காக அசராத அவர் மீண்டும் விளையாடி இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்தார். அத்துடன் யுவ்ராஜிடம் வாங்கிய அடியே நாளடைவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தமக்கு கொடுத்ததாக ப்ராட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2007 டி20 உலகக் கோப்பையில் ஸ்டுவர்ட் ப்ராடை அடித்தப் போட்டியின் இறுதியில் யுவ்ராஜ் சிங்கிடம் அவருடைய இந்திய ஜெர்சியில் கையொப்பம் வாங்கியதாக கிறிஸ் ப்ராட் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டியில் ஐசிசி நடுவராக இருந்த தாம் தம்முடைய மகனுக்கு பரிசாக கொடுக்க அதை வாங்கியதாக கிறிஸ் ப்ராட் தெரிவித்துள்ளார். ஆனால் அதை கிறிஸ்மஸ் தினத்தில் கொடுத்த போது ஸ்டுவர்ட் ப்ராட் குப்பை தொட்டியில் வீசியதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

குப்பை தொட்டியில்:

இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “யுவ்ராஜ் சிங்கிடம் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடி வாங்கியதால் ஸ்டுவர்ட் என்னுடைய செயலைப் பாராட்டவில்லை. யுவ்ராஜ் கையொப்பமிட்ட இந்திய ஜெர்ஸியை கிறிஸ்மஸ் தினத்தில் அவருக்கு பரிசளிப்பதற்காக வாங்கி வைத்திருந்தேன். அதை திறந்து அவருக்கு பரிசாகவும் கொடுத்தேன். அதைப் பார்த்த ஸ்டுவர்ட் குப்பை தொட்டியில் எறிந்தார்”

இதையும் படிங்க: அந்த டேஞ்சரான இந்திய பேட்ஸ்மேனை சீக்கிரம் அவுட்டாக்கலன்னா.. ஆஸியை அடித்து நொறுக்கிடுவாரு.. ரவி சாஸ்திரி

“அந்த தோல்வியின் மேலே அவர் கொஞ்சம் நகைச்சுவை கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அந்த ஜெர்சியை கொடுத்தது பற்றி 5 வருடத்திற்கு முன்பே யுவ்ராஜ் ஒரு பேட்டியில். “என்னுடைய மகனின் கேரியரை கிட்டத்தட்ட முடித்த நீங்கள் அவருக்காக இந்த ஜெர்ஸியில் கையொப்பமிடுங்கள் என்று கிறிஸ் கேட்டார். அவரிடம் நானும் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடி வாங்கியுள்ளதால் அந்த உணர்வை எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். இங்கிலாந்து கிரிக்கெட்டின் வருங்கால வீரருக்கு வாழ்த்துக்கள் என்று கையொப்பமிட்டு கொடுத்தேன்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement