அந்த டேஞ்சரான இந்திய பேட்ஸ்மேனை சீக்கிரம் அவுட்டாக்கலன்னா.. ஆஸியை அடித்து நொறுக்கிடுவாரு.. ரவி சாஸ்திரி

ravi shastri
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 29ஆம் தேதி துவங்கியது. அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறது. ஆனாலும் நம்பர் 2 இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இம்முறை ஆஸ்திரேலியாவில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா போன்ற இந்திய வீரர்கள் முதல் முறையாக விளையாட உள்ளனர்.

- Advertisement -

சீக்கிரம் அவுட்டாக்கலன்னா:

குறிப்பாக ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் அபிஷேக் ஷர்மா இதுவரை ஆஸ்திரேலியாவில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. எனவே வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றிற்கு சாதகமான ஆஸ்திரேலியா மைதானங்களில் அவருடைய ஆட்டம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் அபிஷேக் ஷர்மாவை விரைவாக அவுட்டாக்க தவறினால் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்குவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் ஷர்மா துப்பாக்கி போன்ற டி20 பிளேயர். ஒருவேளை அவர் களத்தில் நீண்ட நேரம் விளையாடினால் நிச்சயம் பொழுதுபோக்கு கிடைக்கும். நீங்கள் ஆஸ்திரேலியர் அல்லது இந்தியர் உட்பட யாராக இருந்தாலும் அவருடைய ஆட்டத்தை ரசிப்பீர்கள்”

- Advertisement -

அடித்து நொறுக்குவார்:

“உங்களிடமிருந்து போட்டியை பறிக்கும் திறன் அவரிடம் இருக்கிறது. அவர் களத்தில் நீண்ட நேரம் இருப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஏனெனில் அவர் உங்களுக்கு தொல்லைகளை உருவாக்குவார். அவருடைய தயாராகும் முறை, தன்னம்பிக்கை, திறன் ஆகியவை நன்றாக இருக்கிறது. நிறைய ஷாட்டுகளை கொண்டுள்ள அவர் முதல் பந்திலிருந்தே அடிக்கலாம் என்ற தமக்குத் தாமே ஆதரவு கொடுப்பார்”

இதையும் படிங்க: 8 விக்கெட்ஸ்.. என்னையா கழற்றி விட்டீங்க.. குஜராத்தை மிரட்டிய ஷமி.. அகர்கருக்கு மீண்டும் பந்தால் பதிலடி

“நன்றாகத் துவங்கி விட்டால் அவர் எதிரணி பவுலிங்கை அடித்து நொறுக்குவார். அதனாலேயே அவர் மிகவும் ஆபத்தானவராக இருப்பார். தன்னுடைய திறன் மேலே நம்பிக்கைக் கொண்டுள்ள அவர் வெடிக்கக் கூடியவராக இருப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2025 ஆசியக் கோப்பையில் ஃபைனல் தவிர்த்து ஏனைய போட்டிகளில் அபிஷேக் எதிரணிகளை பந்தாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement