ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணி இன்று சிட்னி நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
முதல் வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை :
அதிலும் குறிப்பாக முதல் 2 ஆட்டங்களிலும் சொதப்பிய இந்திய அணி இன்று 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடி ஆஸ்திரேலியா அணி 236 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணியானது 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 237 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியிருந்தார். இந்த போட்டியில் 125 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 121 ரன்கள் குவித்தன் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது இந்த போட்டியில் அவர் அடித்த சதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் அவர் அடித்த ஒன்பதாவது சதமாக பதிவாகியுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலிய மண்ணில் அவர் அடித்த ஆறாவது சதமாகவும் பதிவாகியுள்ளது. அது தவிர்த்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 33-வது சதமாக பதிவாகியுள்ள இந்த சதம் ஒட்டுமொத்தமாக அவரது கரியரில் 50-வது சர்வதேச சதமாகவும் மாறியுள்ளது.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 33 சதங்கள், டி20 போட்டிகளில் 5 சதங்கள் என மொத்தமாக 50 சதங்களை அடித்துள்ள அவர் சர்வதேச போட்டிகளில் முதல் வீரராக ஒரு மாபெரும் சாதனையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : சிட்னி போட்டியில் 1 ரன் அடித்ததும் விராட் கோலி கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன் – விவரம் இதோ
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான சர்வதேச போட்டிகளிலும் ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட சதங்களை அடிக்க முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.



