சிட்னி போட்டியில் 1 ரன் அடித்ததும் விராட் கோலி கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன் – விவரம் இதோ

Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு விராட் கோலி இந்த தொடரில் விளையாடி வருவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்திருந்தது.

முதல் ரன்னை கொண்டாடிய விராட் கோலி :

அதோடு இந்த தொடரில் விராட் கோலி எவ்வாறு செயல்படப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. ஆனால் இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் 8 பந்துகளை சந்தித்த அவர் டக் அவுட்டாகி வெளியேறினார். அதேபோன்று இரண்டாவது போட்டியிலும் 4 பந்துகளை சந்தித்து டக் அவுட்டானார்.

- Advertisement -

இப்படி ஆஸ்திரேலிய தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் டக் அவுட்டாகி இருந்ததால் இந்த ஆஸ்திரேலியா தொடரில் இதுவரை ரன் குவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஒரு ரன் அடித்ததும் படு விமர்சையாக அந்த ரன்னை விராட் கோலி கொண்டாடி இருந்தார்.

அவர் அப்படி அந்த ரன்னை கொண்டாடியது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி நகரில் நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 236 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பின்னர் அந்த இலக்கினை துரத்தி விளையாடுகையில் 69 ரன்கள் இருந்தபோது சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்கியதும் சிட்னி ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பினை கொடுத்தனர்.

இதையும் படிங்க : என்னையா கிண்டல் பண்றீங்க? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து அசத்திய ஹர்ஷித் ராணா – விவரம் இதோ

அதனை தொடர்ந்து தான் சந்தித்த முதல் பந்திலேயே ஒரு ரன் அடித்த விராட் கோலி எதிரில் இருந்த ரோஹித் சர்மாவை பார்த்து டக் அவுட் ஆகாமல் ஒரு ரன் எடுத்து விட்டேன் என்பது போன்று கையை தூக்கி விமர்சையாக அந்த முதல் ரன்னை கொண்டாடினார். அவர் இந்த முதல் ரன்னை கொண்டாடிய விதம் ரசிகர்கள் மத்தியிலும் ஆராவாரத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement