இந்த ஒரு காரணம் போதாதா? அடுத்த போட்டியில் அக்சர் படேலுக்கு பதிலா குல்தீப் ஆடுவார் – விவரம் இதோ

Axar and Kuldeep
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இந்த தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி போட்டி மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் இந்திய அணி தற்போதே இந்த தொடரை இழந்துவிட்டது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அடுத்த போட்டியில் அக்சர் படேலுக்கு பதில் குல்தீப் யாதவ் விளையாட வாய்ப்பு :

அதன் காரணமாக அடுத்த போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது இந்திய அணி பெறுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் குல்தீப் யாதவ் விளையாடாதது பெரியளவில் பேசப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி அவருக்கு இடம் கிடைக்கும் பட்சத்தில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் வெளியேறுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது நிதீஷ் ரெட்டி பந்து வீசுகையில் பாயிண்ட் திசையில் பீல்டராக நின்று கொண்டிருந்த அக்சர் பட்டேல் கேட்ச் பிடிக்க முயன்று கை விரலில் காயம் அடைந்தார்.

அதனால் வலியால் துடித்த அவர் 16-வது ஓவரின் போது மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் மீண்டும் சில நிமிடங்களில் களத்திற்கு வந்த அவர் தொடர்ந்து பந்துவீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றியதோடு சேர்த்து 10 ஓவர்களையும் வீசி இருந்தார். ஆனாலும் இந்த தொடரில் அவரது செயல்பாடு பெரியளவில் எடுபடாமல் போனதினாலும் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் இதை கணக்கில் காண்பித்து அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதேவேளையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய குல்தீப் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருவதால் அடுத்த போட்டியில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி டாப் பிளேயரா இருந்தும் அடுத்தடுத்து டக் அவுட்டாக இதுவே காரணம் – முகமது கைப் விளக்கம்

அதோடு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்து இந்த தொடரை இழந்து விட்டதால் அடுத்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement