இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தற்போதைய தொடரில் இடம் பெறவில்லை. தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள ஹார்டிக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்கு திரும்பும் ஹார்டிக் பாண்டியா :
அதன்படி தற்போது இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதனை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது. இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிந்த கையோடு இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அப்படி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி அடுத்த மாதம் ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணிக்கு தான் ஹார்டிக் பாண்டியா திரும்புவார் என்று கூறப்படுகிறது. நவம்பர் மாதம் 14-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தற்போது தனது காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்டு வரும் ஹார்டிக் பாண்டியா விரைவில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்குள்ள பிரத்யேக மையத்தில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெறுவார் என்றும் அங்கு நான்கு வாரங்கள் தங்கி இருக்கும் ஹார்டிக் பாண்டியா தனது உடற்தகுதியை நிரூபித்து விட்டு தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியுடன் பயணிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : அடிலெய்டில் கோலிக்கு ஸ்டான்ட் வைப்பார்கள்.. வைரலாகும் தோனியின் பழைய பேட்டி – விவரம் இதோ
அப்படி தென்னாப்பிரிக்க செல்லும் ஹர்திக் பாண்டியா அங்கு நடைபெற உள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாத வேளையில் அவருக்கு பதிலாக தற்போது நிதீஷ் ரெட்டி இந்திய அணியுடன் இணைந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



