அடுத்த போட்டியில் இந்த தப்பை பண்ணாதீங்க கில்.. கே.எல் ராகுல் விடயத்தில் இதுதான் சரி – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விரைவாகவே ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி போட்டியின் ஆரம்பத்திலேயே சிக்கலை சந்தித்தது.

கே.எல் ராகுல் 5 ஆவது இடத்தில் விளையாடுவது தான் இந்திய அணிக்கு நல்லது :

அதோடு விராட் கோலியும் டக் அவுட்டாகி வெளியேற ஷ்ரேயாஸ் ஐயராலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. அந்த நிலையில் ஐந்தாவது வீரராக களம்புகுந்த அக்சர் பட்டேல் 38 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரியுடன் 31 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

ஆனாலும் அவர் ஐந்தாவது இடத்தில் விளையாடியது தவறு என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்திய அணியில் முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திறமை வாய்ந்த கே.எல் ராகுல் இருந்தும் ஐந்தாவது இடத்தில் அச்சர் பட்டேல் களம் இறக்கப்பட்டார்.

அதே வேளையில் ஆறாம் இடத்தில் களமிறங்கிய கே.எல் ராகுல் 31 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 38 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடி வரும் கே.எல் ராகுல் ஒருநாள் போட்டிகளிலும் டாப் ஆர்டரில் விளையாடி பழக்கப்பட்டவர்.

- Advertisement -

ஆனால் அவரை இப்படி ஆறாவது இடத்தில் களமிறக்குவது தவறு என்றும் இந்திய அணிக்கு கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தில் விளையாடுவது தான் சரி என்றும் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் ஐந்தாவது இடத்தில் ராகுல் விளையாடும் பட்சத்தில் ஷ்ரேயாஸ் ஐயருடனோ அல்லது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வேறு யாருடனோ இணைந்து அவரால் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியும்.

இதையும் படிங்க : இன்னும் 2 ரன்ஸ் தான்.. ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை நிகழ்த்த காத்திருக்கும் – ரோஹித் சர்மா

அது தவிர்த்து பின் வரிசையிலும் வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் ரெட்டி போன்றோர் இருப்பதினால் கே.எல் ராகுலை எவ்வித தயக்கமும் இன்றி ஐந்தாவது இடத்தில் களமிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement