இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
ரோஹித் சர்மா நிகழ்த்தவிருக்கும் சாதனை :
இதன் காரணமாக தற்போது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரினை இழக்காமல் இருக்கும் என்பதனால் இரண்டாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.
எதிர்வரும் அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்பனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மாபெரும் சாதனை ஒன்றினை ஆஸ்திரேலியா மண்ணில் நிகழ்த்தி வரலாற்று சாதனை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய அவர் தற்போது இரண்டாவது போட்டியில் மேலும் 2 ரன்களை மட்டும் அடித்தால் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் மட்டும் 998 ரன்களை அடித்துள்ள ரோகித் சர்மா மேலும் இரண்டு ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அந்த அணிக்கு எதிராக 1000 ரன்களை தொட்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையினை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : நிச்சயமாக ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இதை செய்வாங்க.. அவங்க சாம்பியன்ஸ் – ரிக்கி பாண்டிங் கருத்து
தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா அடுத்த 2027 ஒருநாள் உலக கோப்பை தொடர் வரை விளையாட விரும்புவதால் இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



