பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி லாகூரில் அக்டோபர் 12ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 378 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 93, சல்மான் ஆகா 93, கேப்டன் ஷான் மசூட் 76, முகமது ரிஸ்வான் 75 ரன்கள் எடுத்தனர்.
அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 362/5 என்ற வலுவான நிலையில் இருந்தது. அப்போது அபாரமாக பந்து வீசி பாகிஸ்தானை விரைவில் சுருட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சுபராயன் 2, சேனரான் முத்துசாமி 6 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் 269 ரன்களுக்கு சுருட்டியது.
சுருட்டிய தென் ஆப்பிரிக்கா:
அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 71, டோனி டீ ஜோர்ஸி சதத்தை அடித்து 104 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நோமன் அலி 6, சஜித் கான் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 109 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய பாகிஸ்தான் குறைந்தது 300 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது தங்களை உலக டெஸ்ட் சாம்பியன் என்பதை நிரூபிக்கும் வகையில் பந்து வீசிய தென்னாப்பிரிக்கா அணி பாகிஸ்தானை வெறும் 167 ரன்களுக்கு சுருட்டி வீசியது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அப்துல்லா ஷபிக் 31, பாபர் அசாம் 42, சௌத் ஷாக்கீல் 38 ரன்கள் எடுத்தனர். அதனால் அந்த அணி ஒரு கட்டத்தில் 150/4 என்ற நல்ல நிலையில் இருந்தது.
61 வருட சேசிங் நிகழுமா:
ஆனால் அப்போது அபாரமாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்கா ஷாக்கீல் 38, முகமது ரிஸ்வான் 14, சல்மான் ஆகா 4, ஷாஹின் அப்ரிடி 0, நோமன் அலி 11, சஜித் கான் 1 என எஞ்சிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹர்மர் 4, சேனுரான் முத்துசாமி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். இறுதியில் 277 ரன்களை துரத்தும் தென்னாபிரிக்கா 3வது நாள் முடிவில் 51/2 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: அப்டேட் கேட்காமயே கழற்றி விட்டாங்க.. இதுக்கு மட்டும் எப்படி செட்டாகாம போவேன்? ஷமி பதிலடி
கேப்டன் மார்க்ரம் 3, முல்தார் 0 ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் ரிக்கல்டன் 29*, டீ ஜோர்ஸி 16* ரன்களுடன் எடுத்துள்ளார்கள். இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் வைத்துள்ள தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 226 ரன்கள் தேவைப்படுகிறது. வரலாற்றில் லாகூர் மைதானத்தில் 1961ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 209 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்சமாகும். எனவே இப்போட்டியில் அதையும் தாண்டிய பெரிய இலக்கை சேசிங் செய்து தென்னாபிரிக்கா 61 வருட சாதனையை உடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



