பஸ்பால் இங்கிலாந்துக்கு மாரல் வெற்றி மட்டுமே.. அவர் இல்லனாலும் 3 – 1ன்னு ஆஸி ஜெய்க்கும்.. வார்னர் பேட்டி

David Warner
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. 2011க்குப்பின் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் இங்கிலாந்து திணறி வருகிறது. ஆனால் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து அணியினர் நம்பிக்கைத் தெரிவித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு மாரல் வெற்றி அதாவது தார்மீக வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2023 ஆஷஸ் தொடரை இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்தது. அத்தொடரில் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலியா கீப்பர் அலெக்ஸ் கேரி சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டாக்கினார்.

- Advertisement -

பஸ்பாலுக்கு தார்மீக வெற்றி:

அப்போது ஆஸ்திரேலியா நேர்மையற்ற முறையில் பேர்ஸ்டோவை அவுட்டாக்கி வென்றதாக இங்கிலாந்தினர் விமர்சித்தனர். அதனால் தார்மீக அடிப்படையில் 2023 ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்து வென்றதாக அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடினர். எனவே இம்முறையும் இங்கிலாந்து வாய்மொழியாக மட்டுமே ஆஷஸ் கோப்பையை வெல்லும் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

மற்ற படி கேப்டன் பட் கமின்ஸ் காயத்தால் முழுமையாக விளையாடாவிட்டாலும் ஆஸ்திரேலியா 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும் என்று அவர் கணித்துள்ளார். இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வார்னர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பைக்காக விளையாடுகிறார்கள். இங்கிலாந்து தார்மீகத்திற்காக விளையாடுகிறார்கள். இதையே தலைப்புச் செய்தியாக போடுங்கள்”

- Advertisement -

வார்னர் அதிரடி கணிப்பு :

“4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் சொல்வேன். சிட்னி போன்ற மைதானத்தில் நடைபெறும் போட்டி மழையால் டிராவில் முடியலாம். எனவே 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். இது நல்ல தொடராக அமையும். வெற்றி வாய்ப்பு அனைத்தும் கேப்டன் பட் கமின்ஸ் விளையாடுவதைப் பொறுத்து அமையலாம். ஒருவேளை அவர் விளையாடாமல் போனால் இங்கிலாந்து ஒரு போட்டியில் வெல்லலாம்”

இதையும் படிங்க: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்துள்ள மாபெரும் கவுரவம் – விவரம் இதோ

“ஒருவேளை கமின்ஸ் முழுமையாக விளையாடினால் 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். இல்லையென்றால் கூட இங்கிலாந்து அதிகபட்சமாக ஒரு போட்டியில் மட்டுமே வெல்லும்” என்று கூறினார். மொத்தத்தில் நவம்பர் 19ஆம் தேதி துவங்கும் 2025 – 26 ஆஷஸ் தொடருக்காக இம்முறையும் அனைத்து ரசிகர்களிடமும் வழக்கமான எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement