இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வரும் வேளையில் எதிர்வரும் 2026-ஆம் ஆண்டிற்கான 19-வது சீசனானது அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறும் மற்றொரு நட்சத்திரம் :
இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்க வைத்துக் கொண்டு தேவையற்ற வீரர்களை விடுவிக்க தயாராகி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அணியுமே தங்கள் அணியிலிருந்து வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த பாட்டியல் வெளியாகும் முன்னதாகவும் ஒரு சில வீரர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு ஒவ்வொரு அணியில் இருந்து வெளியேற முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் தற்போது கூடுதலாக துருவ் ஜுரேலும் அந்த அணியில் இருந்து வெளியேற இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது சஞ்சு சாம்சனை தாண்டி புதிய கேப்டனாக ரியான் பராக்கை நியமிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கேப்டன் பதவிக்கு போட்டி போட்டு வருவதால் அந்த அணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன.
இதன் காரணமாக சஞ்சு சாம்சன் வெளியேற முடிவு செய்துள்ளார். அதேபோன்று தற்போது இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறி வேறொரு அணிக்காக செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : துருவ் ஜுரேலின் இந்த குணம் உண்மையிலேயே எங்களை வியக்க வைக்கிறது – அசிஸ்டன்ட் கோச் பேட்டி
கடந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில் அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட ஜுரேல் தற்போது அந்த அணியின் சூழல் சரியில்லை என்கிற காரணத்தால் வெளியேறவுள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.



