ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை நடைபெறும் மினி ஏலத்தில் நிறைய அணிகள் தங்களுக்குத் தேவையான முக்கிய வீரர்களை வாங்கத் தயாராகி வருகிறது. அந்த ஏவலத்திற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேவையற்ற வீரர்களை கழற்றி விட உள்ளதாக செய்திகள் வெளியாகின.
5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சென்னை கடந்த சீசனில் மோசமாக விளையாடி வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. அந்த அணியின் தோல்விக்கு பேட்டிங் துறை அதிரடியாக விளையாடத் தவறியது முக்கிய காரணமானது. குறிப்பாக தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் ஆகியோர் மோசமாக விளையாடியது சென்னை அணியின் தோல்விக்கு வித்திட்டது.
கொஞ்சம் இருங்க பாய்:
அது போக டேவோன் கான்வே, சாம் கரண் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் தடுமாற்றமாக விளையாடியது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பங்காற்றவில்லை. எனவே அவர்களை அடுத்த வருட ஏலத்திற்கு முன் சென்னை அணி கழற்றி விட உள்ளதாக கிரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அந்த செய்தியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
இது பற்றி தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில். “கவலைப்படாதீர்கள், நாங்கள் அனைத்தையும் பயோவில் அப்டேட் செய்துள்ளோம்” என்று சிஎஸ்கே அணி பதிவிட்டுள்ளது. அந்த அணி குறிப்பிட்டுள்ள பயோவில் சென்று பார்த்தல். “இங்கே நீங்கள் பார்க்கும் வரை, எந்த செய்தியும் அதிகாரப்பூர்வமானது கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அறிவிப்பு:
இதிலிருந்து “கொஞ்சம் இருங்க பாய்” தற்போது உலாவும் செய்திகள் யாவும் உண்மையல்ல என்ற வகையில் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது என்றே சொல்லலாம். எப்படி பார்த்தாலும் விஜய் சங்கர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி ஆகியோரை சிஎஸ்கே விடுவிப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. அதே சமயம் டேவோன் கான்வே 2021, 2023 ஐபிஎல் கோப்பைகளை சிஎஸ்கே வெல்ல முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க: கில் வந்தும்.. ஆசியக் கோப்பையில் சாம்சனை விளையாட வைக்க இதான் காரணம்.. சூரியகுமார் பேட்டி
மேலும் சுட்டிக்குழந்தை என்று சிஎஸ்கே ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற சாம் கரண் தக்க வைக்கப்படுவதற்கும் கணிசமான வாய்ப்புள்ளது. எனவே சென்னை அணி மீண்டும் அவர்களை தக்க வைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனாலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத வரை வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று அந்த அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



