இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டுள்ளார். இத்தனைக்கும் அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 11 வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஃபைனலுக்கு சென்றது. 2024 டி20 உலகக் கோப்பையை அவரது தலைமையில் வென்ற இந்தியா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் முத்தமிட்டது.
அதனால் 2027 உலகக்கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா என்று சந்தேகம் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது.
சரியான முடிவு:
இந்த முடிவு பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2027இல் ரோஹித் சர்மா 40 வயதில் அசத்துவது மிகவும் கடினம் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணியின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கழற்றி விட்டது சரியான முடிவு என்று அவர் கூறியுள்ளார்.
2022இல் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்த முன்னாள் பிசிசிஐ தலைவரான கங்குலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவிடம் பேசப்பட்டிருக்கும் என்று உறுதியாக சொல்வேன். எனவே ரோஹித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? என்பது எனக்குத் தெரியாது. அது ஒன்றாக சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். ஏனெனில் ரோஹித் சர்மா அற்புதமான தலைவர்”
கங்குலி கருத்து:
“கடந்த 2 வருடங்களில் டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவிடம் செயல்திறன் ஒரு பிரச்சினையும் கிடையாது. 2 வருடங்களில் தென்னாபிரிக்காவில் உலகக் கோப்பை துவங்கும் போது ரோஹித் 40 வயதை தாண்டியிருப்பார் என்பதே தேர்வுக்குழுவின் எண்ணமாக இருக்கும். டி20 கிரிக்கெட்டில் விளையாடாத ரோஹித் 2026 உலகக் கோப்பையிலும் விளையாட மாட்டார்”
இதையும் படிங்க: இன்னும் 10 ரன்கள் போதும்.. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தல் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரவீந்திர ஜடேஜா
“40 வயது என்பது விளையாட்டில் பெரியது. 40 வயத்தில் அவர் நன்றாக விளையாடுவாரா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. எனவே இம்முடிவு மோசமானது கிடையாது. அது எனக்கும் டிராவிட்டுக்கும் நடந்தது போல அனைவருக்கும் நடக்கும். ஒருவேளை சுப்மன் கில் 12000 – 13000 ரன்கள் அடித்தால் கூட 40 வயதில் இருந்தால் இதே நிலையை சந்திப்பார். ஏனெனில் விளையாட்டில் ரோஜா பெடரர், ரபேல் நடால், டிஜியோ மரோடானா உட்பட அனைவரும் ஒருநாள் தங்களது கேரியரை முடிக்க வேண்டும். எனவே ரோஹித் உதவியுடன் கில்லை அடுத்த கேப்டனாக வளர்க்க நினைக்கும் முடிவு சரியானது” என்று கூறினார்.



