116க்கு ஆல் அவுட்.. 5க்கு 5 வெற்றி.. ஆஸியை சொந்த ஊரில் 1.5 நாளில் டபுள் ஒய்ட்வாஷ் செய்த இளம் இந்தியா

IND vs AUS U19
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அண்டர்-19 அணி அங்கு முதலாவதாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இளம் இந்திய அணி 3 – 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஸ் செய்து வென்றது. அடுத்ததாக அவ்விரு அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின.

அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது. இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி அக்டோபர் 7ஆம் தேதி மெக்கே நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

1.5 நாளில் மிரட்டிய இந்தியா:

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அண்டர்-19 அணி பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் இந்தியாவிடம் வெறும் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அலெக்ஸ் எங் 66, யாஷ் தேஷ்முக் 22 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக உதவ் மோகன் 2, ஹெனில் பட்டேல் 3, கிளன் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஸ் மாத்ரே 4, விகான் மல்கோத்ரா 11, ராகுல் குமார் 9, ஹர்வன்ஸ் பங்காளியா 1 என வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் வைபவ் சூரியவன்சி 20 (14), வேதாந்த் திரிவேதி 25 ரன்கள் எடுத்து ஓரளவு கை கொடுத்தனர். அவர்களை விட லோயர் ஆர்டரில் 7, 8, 9 ஆகிய இடங்களில் கிளன் பட்டேல் 26, ஹெனில் பட்டேல் 22, தீபேஷ் தேவேந்திரன் 28 ரன்கள் குவித்து இந்தியாவை முன்னிலைப் பெற வைத்தனர்.

- Advertisement -

டபுள் ஒய்ட்வாஷ் வெற்றி:

அதனால் தப்பிய இந்திய அண்டர்-19 அணி 171 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானாலும் 36 ரன்களை முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக கேசி பார்டன் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் 116 ரன்களுக்கு சுருட்டி வீசினார்கள். அதிகபட்சமாக அலெக்ஸ் எங் 38 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக நமன் புஸ்பக் 3, ஹெனில் பட்டேல் 3, உதவ் மோகன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: இதயமின்றி இந்தியாவிடம் வெ.இ தோற்க அது ஒரு சாக்கா? ரிச்சர்ட்ஸ் எனக்கும் தான் கிடைக்கல.. சேஸை சாடிய லாரா

இறுதியில் 81 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு வைபவ் சூர்யவன்சி கோல்டன் டக் அவுட்டானார். இருப்பினும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 13, விஹான் மல்கோத்ரா 21, வேதாந்த் திரிவேதி 22*, ராகுல் குமார் 14* ரன்கள் எடுத்தனர். அதனால் 12.2 ஓவரில் 84/3 ரன்களை அடித்த இந்தியா வெறும் ஒன்றரை நாளில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக ஒருநாள் தொடரைப் போலவே 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரையும் வென்ற இந்திய அண்டர்-19 அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் டபுள் ஒய்ட்வாஷ் செய்து மிரட்டியுள்ளது.

Advertisement