இதயமின்றி இந்தியாவிடம் வெ.இ தோற்க அது ஒரு சாக்கா? ரிச்சர்ட்ஸ் எனக்கும் தான் கிடைக்கல.. சேஸை சாடிய லாரா

Brian Lara 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அஹமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வெறும் இரண்டரை நாட்களில் இந்தியா தோற்கடித்தது.

அந்தளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அப்போட்டியில் இந்தியாவுக்கு துளியளவு கூட போட்டியைக் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். அது பற்றி கேட்டதற்கு தங்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது தோல்விக்கு ஒரு காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் தெரிவித்தார். மொத்தத்தில் ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் அசுரனாக எதிரிணிகளை சொல்லி அடித்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

- Advertisement -

இதெல்லாம் காரணமா:

இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இந்தியாவிடம் தோற்றோம் என்று வெஸ்ட் இண்டீஸ் சேஸ் சொல்வது சரியல்ல என ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். உண்மையில் தற்போதுள்ள வசதிகள் கூட இல்லாமல் தங்களது வெஸ்ட் இண்டீஸ் அசத்தியதாக லாரா தெரிவித்துள்ளார். இது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. “தற்போது நீங்கள் எதை செய்ய வேண்டுமானாலும் பணம் பிரச்சினையாக இருக்கிறது”

“ஆனால் 15 – 16 வருடங்களுக்கு முன்பாக தன்னார்வமாக விளையாடுவது பெரிய விஷயமாக இருந்தது. அப்போதெல்லாம் பணம் வாங்காத பயிற்சியாளர்கள் இருந்தனர். ஆனால் இப்போது விஷயங்களை செய்து முடிக்க வேண்டுமானால் உங்களுக்கு முதலீடு தேவைப்படுகிறது. அதுவே பெரிய பங்காற்றுகிறது. அதே சமயம் ரோஸ்டன் சேஸ் மற்றும் இதர வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் நீங்கள் இதயத்திலிருந்து விளையாடுகிறீர்களா என்று நான் கேட்பேன்?”

- Advertisement -

லாரா அதிருப்தி:

“உண்மையிலேயே அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட விரும்புகிறார்களா? என்பதே முக்கியமான விஷயமாகும். ஏனெனில் 30 – 40 வருடங்களுக்கு முன்பாக எங்களுக்கு நல்ல அடிப்படை வசதிகள் இல்லை. விவ் ரிச்சர்ட்ஸ் நல்ல பயிற்சி ஆடுகளங்கள் மற்றும் வசதிகளைக் கொண்ட சூழ்நிலைகளில் பேட்டிங் செய்யவில்லை. நாங்களும் அதையே பெற்றோம். ஆனால் அப்போது எங்களுக்கு விளையாட்டு மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதற்கான ஆர்வம் வித்தியாசமாக இருந்தது”

இதையும் படிங்க: யுவ்ராஜ் சிஷ்யன்.. அபிஷேக் பணத்துக்கு இல்லாம அதுக்கும் முக்கியதுவம் கொடுக்கும் பிளேயர்.. லாரா பேட்டி

“எனவே தற்போதுள்ள வீரர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய மகன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுகிறார்கள் என்பதை மனதில் கொள்வார்கள். வசதிகள் போதவில்லை என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு வீரரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதற்கான ஆசை மற்றும் விருப்பத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement