இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு ட்ரீட் வைக்கப்போகும் கம்பீர் – விவரம் இதோ

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்யாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய வீரர்களுக்கு விருந்தளிக்கும் கவுதம் கம்பீர் :

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் வீரர்கள் அனைவருக்கும் கெளதம் கம்பீர் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீரின் சொந்த ஊர் டெல்லி என்பதனாலே அவர் தனது இல்லத்தில் இந்திய வீரர்களை அழைத்து இரவு விருந்து அளிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த விருந்தில் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது. அதற்கு அடுத்து தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை குறிவைத்து நகர்ந்து வருகிறது. கம்பீரின் பயிற்சியின் கீழ் நிறைய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : 4 வருடத்துக்கு முன்பே சுப்மன் கில்.. இதை செய்வாருன்னு டிராவிட் கணித்தது உண்மை ஆகிடுச்சு.. ஆர்பி சிங்

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement