ஐசிசி மகளிர் உ.கோ: 88 ரன்ஸ்.. 12க்கு 12 வெற்றி.. 50 அடிக்காமலேயே பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

Ind vs pak women
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் ஐந்தாம் தேதி இலங்கை உள்ள கொழும்புவில் 6வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் பரம எதிரிகள் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்மிரிதி மந்தனா 23 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் அசத்திய பிரதிகா ராவல் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 19 ரன்களில் பெவிலியின் திரும்பிய போதிலும் ஹர்லின் தியோல் பொறுப்புடன் விளையாடி 46 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

50 அடிக்காமலேயே அசத்தல்:

மிடில் ஆர்டரில் ஜெமிமா ரோட்ரிகஸ் 32, தீப்தி சர்மா 25 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார்கள். லோயர் ஆர்டரில் ஸ்னே ராணா 20 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி நேரத்தில் 3 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட ரிச்சா கோஸ் 35* (20) ரன்களை அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 247 ரன்கள் குவித்தது.

இதனால் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை அடித்து அசத்தியது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக டயானா பைக் 4, கேப்டன் பாத்திமா சனா 2, சடியா இக்பால் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீராங்கனைகள் முனிபா அலி 2, சடாப் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியா 12க்கு 12 வெற்றி:

அடுத்து வந்த சிட்ரா அமின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எதிர்ப்புறம் வந்த அலியா ரியாஸ் 2 ரன்னில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த நட்டாலயா பர்வேஸ் நிதானமாக விளையாடி 33 ரண்களில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய அமின் அரை சதமடித்து 81 ரன்கள் குவித்து சிறப்பாக போராடி அவுட்டானார்.

இருப்பினும் லோயர் ஆர்டரில் கேப்டன் ஃபாத்திமா சானா 2, சிட்ரா நவாஸ் 14 என மற்ற வீராங்கனைகள் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா 43 ஓவரில் பாகிஸ்தானை 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா இத்தொடரில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

இதையும் படிங்க: 318 ரன்ஸ் சேசிங்கில் இந்தியா ஏ த்ரில் வெற்றி.. 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆஸியை வெளுத்த பிரப்சிம்ரன்.. ஸ்ரேயாஸ், பராக்

அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 12 ஒருநாள் மகளிர் போட்டிகளில் இந்தியா 12வது வெற்றிகளை 100% விகிதத்தில் பெற்று தங்களுடைய சாதனையை தொடர்கிறது. குறிப்பாக மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொண்ட 5 போட்டிகளிலும் இந்தியா 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணிக்கு கிராந்தி கௌட் 3, தீப்தி சர்மா 3, ஸ்னே ராணா 2 விக்கெட்டுகள் எடுத்து வெற்றி பெறச் செய்தனர்.

Advertisement