146க்கு அவுட்.. வெ.இ அணியை 2.5 நாளில் அசால்ட்டாக சாய்த்த இந்தியா.. 23வது வருடமாக தொடர்ந்து வெற்றி நடை

IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அஹமதாபாத் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் இந்திய அணியின் தரமான பந்து வீச்சில் அந்த அணி முதல் இன்னிங்சில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரிவ்ஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4, ஜஸ்ப்ரித் பும்ரா 3, குல்தீப் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெய்ஸ்வால் 36 ரன்களில் அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய கேஎல் ராகுல் அரை சதத்தை அடித்த நிலையில் எதிர்ப்புறம் வந்த சுதர்சன் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல்:

அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் அரை சதமடித்து 50 ரன்களில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் – ரவீந்திர ஜடேஜா 206 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினர். அதில் தனது முதல் சதத்தை அடித்த ஜுரேல் 125, ரவீந்திர ஜடேஜா 104* ரன்கள் விளாசினர். அப்போது 448/5 ரன்கள் அடித்த இந்தியா 2வது நாள் முடிவுடன் தங்களது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

அதனால் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை விட 286 ரன்கள் முன்னிலை பெற்றது. சுமாராக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முன்பை விட மோசமாக பேட்டிங் செய்து வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 38, ஜஸ்டின் க்ரிவ்ஸ் 25, ஜெய்டேன் சீல்ஸ் 22 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 2.5 நாட்களில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவது உறுதி – வெளியான ஆதாரம்

இதையும் சேர்த்து 2002க்குப்பின் தொடர்ந்து 23வது வருடமாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்காமல் இந்தியா வெற்றி நடை போடுகிறது. அந்தக் காலகட்டங்களில் 25 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்ட இந்தியா 14 வெற்றிகளையும் 11 ட்ராவையும் பதிவு செய்துள்ளது. மறுபுறம் போராடாமலேயே வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக தோற்றது.

Advertisement