இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகிய இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் 2024 டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருந்தனர். இதன் காரணமாக தற்போது இவ்விரு ஜாம்பவான் வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கின்றனர்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவது உறுதி :
இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தாலும் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிசிசிஐ அவர்களை தேர்வு செய்யுமா? என்ற ஒரு கேள்வி பல மாதங்களாகவே பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகி0யுள்ள ஒரு அறிவிப்பின்படி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராத் கோலி ஆகியோர் விளையாடுவது உறுதியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான அறிவிப்பு யாதெனில் :
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அதிகாரப்பூர்வமான விளம்பர டீசரை ஒளிபரப்பாளர்கள் தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளனர். அதில் ஆஸ்திரேலியா அணி சார்பாக முதன்மை வீரர்களாக ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் வேளையில் இந்தியா சார்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது உறுதி என்று கூறலாம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அக்டோபர் 19-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க : இதுவே போதும்.. நாங்க விளையாடப்போறது இல்ல.. மூன்றாம் நாள் காலை முக்கிய முடிவை எடுத்த – கேப்டன் கில்
சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் வேளையில் இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.



