எனக்கும் அது தெரியாது.. இந்திய அணி என்னையும் மதிக்கிறாங்கன்னு தெரியுது.. ஜடேஜா பேட்டி

Ravindra jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அந்தத் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு அறிமுகமான அவர் கடந்த 12 வருடங்களில் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 3800+ ரன்கள் மற்றும் 330+ விக்கெட்டுகளை எடுத்துள்ள ஜடேஜா இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2012 – 2024 வரையிலான காலகட்டங்களில் சொந்த மண்ணில் இந்தியா ஒரு தொடரில் கூட தோற்காமல் உலக சாதனை வெற்றி நடை போட அவரும் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

எனக்கே தெரியாது:

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய உதவினார். அப்படி நீண்ட வருடங்களாக இந்திய அணிக்காக உழைத்து வரும் அவர் தான் தற்போதுள்ள வீரர்களிலேயே சீனியராக உள்ளார். அதனாலேயே அவரை பிசிசிஐ துணை கேப்டனாக நியமித்துள்ளது என்று சொல்லலாம்.

இந்நிலையில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது தமக்கே தெரியாது என்று ஜடேஜா கூறியுள்ளார். இது இந்திய அணியினர் தம்மை மதிப்பதை காட்டுவதாகவும் ஜடேஜா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் என்னிடம் எதையும் சொல்லவில்லை. அணி அறிவிக்கப்பட்ட போது என்னுடைய பெயரின் பிற்பகுதியில் துணைக் கேப்டன் என்று எழுதியிருப்பதைப் பார்த்தேன்”

- Advertisement -

மதித்து கொடுக்கப்பட்ட பொறுப்பு:

“நாளின் இறுதியில் நீங்கள் பகிர வேண்டிய அனுபவங்கள் அனைத்தும் உங்களுடைய அணிக்காக பகிர வேண்டும். இந்த பொறுப்பின் வாயிலாக இந்திய அணி எனக்கு மரியாதை கொடுத்துள்ளனர். பயிற்சியாளர், கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் ஆகியோர் எனக்குப் பொறுப்பை கொடுக்க முடிவெடுத்துள்ளார்கள். எனவே அணி திட்டமிடும் போது அல்லது தேவைப்படும் அனைத்து சூழ்நிலைகளிலும் நான் மகிழ்ச்சியுடன் பங்காற்றுவேன்”

இதையும் படிங்க: 2025 ஆசியக் கோப்பை இந்திய அணி.. 1983 உ.கோ அணியை வீழ்த்தும்.. அவர் இன்னும் அசத்தனும்.. கபில் தேவ்

“ஒரு வீரராக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நான் என்னுடைய தன்னம்பிக்கையை சம்பாதித்தேன். நீங்கள் இங்கிலாந்தில் அசத்தும் போது தன்னம்பிக்கை கிடைக்கும். முன்னோக்கிச் செல்கையில் அந்த தன்னம்பிக்கையை இத்தொடரில் பயன்படுத்தி ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுக்க முயற்சிப்பேன்” என்று கூறினார்.

Advertisement