இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அனுபவ வீரரான சத்தீஸ்கர் புஜாரா வயது மூப்பு காரணமாகவும், சற்று சுமாரான பேட்டிங் ஃபார்ம் காரணமாகவும் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட வேளையில் அவரது மூன்றாவது இடத்தில் கடந்த சில போட்டிகளாகவே தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கி விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான மூன்றாம் இடத்தில் பல்வேறு வீரர்களை பரிசோதித்த இந்திய அணி இறுதியாக தற்போது சாய் சுதர்சனை அந்த இடத்தில் விளையாட வைத்து வருகிறது.
சாய் சுதர்சனை ஆதரிக்கிறாரா? சுப்மன் கில் : ரசிகர்கள் கேள்வி
ஆனாலும் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் வெறும் 23 ரன்கள் சராசரி உடன் 147 ரன்களை மட்டுமே எடுத்துள்ளதால் இனியும் தொடர்ந்து அவர் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும்பியுள்ளது.
அதோடு குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில்லுடன் இணைந்து விளையாடி வரும் பிணைப்பினால் தான் கேப்டன் அவருக்கு ஆதரவு தருகிறாரா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடுவோர் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியம்.
அந்த வகையில் கடந்த காலங்களில் ராகுல் டிராவிட், சத்தீஸ்வர் புஜாரா போன்ற ஜாம்பவான்கள் மூன்றாவது இடத்தில் களமிறங்கி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது மாடர்ன் டே டி20 பிளேயரான சாய் சுதர்சனை மூன்றாம் இடத்தில் ஏன் களம் இறக்க வேண்டும்? அவர் நிலையாக நின்று விளையாடுவதில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் சாய் சுதர்சனுக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் தேவ்தத் படிக்கல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களை பயன்படுத்தி பார்க்கலாம் என்றும் அப்படி சாய் சுதர்ஷனை விளையாட வைக்க வேண்டும் என்றால் மிடில் ஆர்டரில் விளையாட வையுங்கள் என்றும் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐஸ்ப்ரீத் பும்ரா வழி கொடுத்தும் அந்த ஒரு முக்கிய விக்கெட்டை வீழ்த்த தவறிய முகமது சிராஜ் – என்ன நடந்தது?
ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்சில் 7 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.



