வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் செய்த மிகப்பெரிய தவறு.. இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற வாய்ப்பு – விவரம் இதோ

IND vs WI Toss
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் செய்த மெகா தவறு :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு தங்களது முதல் இன்னிங்க்ஸை முடித்துக் கொண்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது முதலாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் செய்த மிகப்பெரிய தவறு ஒன்று தற்போது அந்த அணியை இன்னிங்ஸ் தோல்விக்கு செல்லும் வகையில் வழி அமைத்துள்ளது.

அந்த வகையில் ரோஸ்டன் சேஸ் செய்த தவறு யாதெனில் : இந்தியா போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் ஆடுகளங்களில் டாஸ் வென்றால் பொதுவாக கேப்டன்கள் முதலில் பந்துவீசவே விரும்புவார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தைரியமான முடிவு எடுத்தர்.

- Advertisement -

அப்படி அவர் எடுத்த முடிவு தான் தவறாக மாறியுள்ளது. ஏனெனில் அனுபவ வீரர்கள் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் முதல் நாளின் முதல் பாதியிலேயே 162 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் நிச்சயம் இந்திய அணி இன்றைய நாள் முழுவதும் பேட்டிங் செய்யும்.

இதையும் படிங்க : 15 மேட்ச் டக் அவுட்டானாலும் பரவாயில்ல.. சூரியகுமார் எனக்கு கொடுத்த ப்ராமிஸ் இதுதான் – அபிஷேக் சர்மா நெகிழ்ச்சி

அதுமட்டுமின்றி போட்டியின் இரண்டாம் நாளன்றும், மூன்றாம் நாள் அன்றும் பாதி வரை பேட்டிங் செய்யும் பட்சத்தில் மிகப்பெரிய ரன் குவிப்பில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால் எப்படியும் 300 ரன்கள் வரை முன்னிலை வந்தாலே இந்திய அணி இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றிபெற மிகப்பெரிய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement