அனுபவமில்லாத வெ.இ அணிக்கு எதிராக இத்தனை பவுலர்ஸ் எதுக்கு? அவரை சேர்த்திருக்கலாம் – ரசிகர்கள் கருத்து

IND vs WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டிக்கு இத்தனை பவுலர்கள் எதற்கு? :

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் 10 ஓவர்களே விளையாடியுள்ள வேளையில் முதல் நாளின் ஆரம்பத்திலேயே 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை மட்டுமே குவித்துள்ளது. இதன் காரணமாக போட்டியில் முதல் ஒரு மணி நேரத்திலேயே இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 6 பந்துவீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பிள்ளது. மேலும் அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இத்தனை பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் விளையாடும் வேளையில் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடுகிறார்கள். அதுமட்டுமின்றி கூடுதலாக ஆல்ரவுண்டராக பிளேயிங் லெவனில் நிதீஷ் ரெட்டியும் விளையாடுகிறார்.

- Advertisement -

ஆனால் அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இப்படி ஆறு பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என்றும் இவர்களில் ஒருவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல்லை கொண்டு வந்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பொறுத்தவரை 5 வீரர்கள் மட்டுமே முழுநேர பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க : குல்தீப், சுதர்சன் பேக்.. 4லயும் ஜெய்ப்போம்.. முதல் வெ.இ டெஸ்ட் போட்டிக்கான இந்திய லெவன் பற்றி கில் பேட்டி

அந்தவகையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில், துருவ் ஜுரம் ஆகிய ஐவர் மட்டுமே முழுநேர பேட்ஸ்மேன்களாக பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளனர். இதனால் நிச்சயம் மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கல்லை சேர்த்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement