குல்தீப், சுதர்சன் பேக்.. 4லயும் ஜெய்ப்போம்.. முதல் வெ.இ டெஸ்ட் போட்டிக்கான இந்திய லெவன் பற்றி கில் பேட்டி

Ind vs wi Toss
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்தது. அதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் முதல் முறையாக விளையாடும் இளம் அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவதாக கேப்டன் சுப்மன் கில் அறிவித்தார். கடந்த இங்கிலாந்து தொடரில் 5 போட்டிகளிலும் பெஞ்சில் அமர்ந்த அவருக்கு தற்போது அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளதால் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

4 போட்டியிலும் ஜெய்ப்போம்:

அதே போல ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் ஸ்பின் ஆல் ரவுண்டர்களாக தேர்வு செய்யப்பட்டனர். வேகப்பந்து வீச்சுத் துறையில் இங்கிலாந்து தொடரின் கடைசிப் போட்டியில் விளையாடாத ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் கருண் நாயர் நீக்கப்பட்டதால் தமிழக வீரர் சாய் சுதர்சன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துக் கொண்டு அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் அந்த 4 போட்டிகளிலும் வென்று 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிப்போம் என்று கில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்திய அணி:

“இந்த வருடத்திற்கு முன் எங்களுடைய சொந்த ஊரில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். அந்த 4 போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற பார்க்கிறோம். அதற்காக தயாரான முறைகள் நன்றாக இருக்கிறது. அனைவரும் நல்ல தொடர்பில் இருப்பதால் சிவப்பு பந்துக்கு தங்களுடைய மனநிலையை மாற்றினால் போதும். பிட்ச் நன்றாக தெரிகிறது. டாஸ் இழந்ததில் ஏமாற்றம் இல்லை”

இதையும் படிங்க: 242க்கு ஆல் அவுட்.. ஆஸியை சுருட்டி வீசிய இந்தியா ஏ.. ஸ்ரேயாஸ் தலைமையில் மெகா வெற்றி

“பிட்ச் தார்பாய்க்கு கீழே இருந்ததால் ஆரம்பத்தில் உதவி கிடைக்கலாம். எங்களுக்கு பும்ரா, சிராஜ், ஜடேஜா, சுந்தர், குல்தீப் ஆகிய 2 வேகம், 3 சுழல் பவுலர்கள் விளையாடுகிறார்கள். நித்திஷ் ஆல் ரவுண்டர்” என்று கூறினார். இந்திய அணி: யசஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜுரேல் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

Advertisement