கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாகவே ஓய்வில் இருந்து வந்த ஜெய்ஸ்வால் தற்போது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார்.
பெங்களூருவில் எல்லா வசதியும் இருக்கு : யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
அந்தவகையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது இங்கு நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் சுப்மன் கில் தலைமையிலான இந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் முதன்மை துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இடம் பிடித்துள்ளார்.
இந்த தொடருக்காக தயாராகும் வகையில் கடந்த சில வாரங்களாகவே பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால் தற்போது அகமதாபாத் வந்தடைந்து அங்கும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில வாரங்களாகவே பெங்களூருவில் பயிற்சி செய்தது தனக்கு மிகவும் திருப்தியாக உள்ளதாக ஜெய்ஸ்வால் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி மையத்தில் நான் பயிற்சி செய்தது உண்மையிலேயே மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த இடம் உண்மையிலேயே அற்புதமான உணர்வை தந்தது. பெங்களூருவில் அனைத்து வசதிகளும் உள்ளன. குறிப்பாக ஒரு விளையாட்டு வீரர்களுக்கான அனைத்துமே அங்கு உள்ளது. பயிற்சி செய்யும் மையம், ஜிம், ஓடுவதற்கான இடம், ஓய்வு எடுப்பதற்கான இடம், சிகிச்சைக்கான இடம் என அனைத்து வகையான வசதிகளும் அங்கு உள்ளன.
எனவே பெங்களூருவில் இருப்பது உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்குள்ள அனைத்து வசதிகளையும் நான் இம்முறை முழுமையாக பார்த்தேன். காயத்திலிருந்து விடுபடுவதாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட முறையில் நமது திறனை வளர்த்துக் கொள்வதாக இருந்தாலும் சரி, பயிற்சி, ஜிம் என எதுவாக இருந்தாலும் நாம் அங்கு செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஐக்கிய அரபு அமீரக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட கோப்பை.. விரைவில் இந்தியா வருகிறது – தரமான சம்பவம்
தற்போது இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக நான் மிகச் சிறப்பாக தயாராகியுள்ள வேளையில் அந்த பயிற்சி மையம் எனக்கு மிகவும் உதவியது என யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சி மையத்தை பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.



