பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணி 19.4 ஓவர்களில் 150 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நான் திலக் வர்மாவுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் சிறப்பான ஒன்று : சஞ்சு சாம்சன்
இந்தப் போட்டியின் போது இந்திய அணி சார்பாக ஐந்தாவது வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 21 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 24 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். அதிலும் குறிப்பாக இந்திய அணி ஆரம்பத்திலேயே 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அவ்வேளையில் திலக் வர்மாவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சங் இந்திய அணியை ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு வந்தார் என்று கூறலாம். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது செயல்பாடு குறித்தும், இந்திய அணி செயல்பாடு குறித்தும் சில வெளிப்படையான கருத்துக்களை அவர் பகிர்ந்திருந்தார் அந்த வகையில் சஞ்சு சாம்சன் கூறியதாவது :
உண்மையிலேயே இது போன்ற ஒரு பிரஷரான மேட்சில் சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எப்பொழுதுமே அதிக அழுத்தம் இருக்கும். நான் இது போன்ற போட்டிகளில் பெரியளவில் விளையாடியது கிடையாது. ஆனாலும் என்னுடைய அனுபவத்தை இந்த போட்டியில் பயன்படுத்தினேன். அதனாலே பதட்டம் அடையாமல் இலக்கை நோக்கி செல்ல முடிந்தது.
அதிலும் குறிப்பாக பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விளையாட வேண்டும் என்று திலக் வர்மாவுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இத்தனை ஆண்டுகளாக நான் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த அனுபவம் தான் இது போன்ற பிரஷரான போட்டிகளில் பதட்டம் இல்லாமல் செயல்பட வைக்கிறது.
இதையும் படிங்க : நல்ல துவக்கம் கிடைத்தும் நாங்க பைனல்ல தோக்க இதுவே காரணம் – பாகிஸ்தான் கேப்டன் வருத்தம்
இத்தனை ஆண்டு கால கிரிக்கெட்டில் நான் கற்றுக் கொண்ட இந்த அனுபவம் தான் இது போன்ற பிரஷரான போட்டிகளில் நிதானத்தை இழக்காமல் சூழலுக்கு ஏற்றார் போல் விளையாட உதவியது. பெரிய பெரிய தொடர்களில் இதுபோன்ற நிலை வந்தால் எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டதாகவும் சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



