பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியர்களுக்கான வெற்றியைப் பெற அந்த 3 பேர் ஹெல்ப் பண்ணாங்க.. ஆட்டநாயகன் திலக் பேட்டி

Tilak Varma 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. துபாயில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 146 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 57, ஃபக்கார் ஜமான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அடுத்ததாக விளையாடிய இந்தியா போராடி 19.4 ஓவரில் 150/5 ரன்கள் எடுத்து இத்தொடரில் 3வது முறையாக பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக திலக் வர்மா 69*, சஞ்சு சாம்சன் 24, சிவம் துபே 33 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது.

- Advertisement -

ஆட்டநாயகன் திலக்:

இந்த வெற்றிக்கு 69* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய திலக் வர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில், கேப்டன் சூரியகுமார் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் 20/3 என இந்தியா தடுமாறியது. அப்போது சாம்சன், துபே ஆகியோருடன் சேர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய அவர் இந்தியாவை தலை குனிய விடாமல் வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு சாம்சன், துபே ஆகியோர் எதிர்புறம் பேட்டிங்கில் தமக்கு உதவி செய்ததாக திலக் வர்மா தெரிவித்துள்ளார். மேலும் துபாய் போன்ற ஸ்லோவான பிட்ச்சில் அசத்துவதற்கான ஆலோசனைகளை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பேசியது பின்வருமாறு. “போட்டியில் அழுத்தம் இருந்தது”

- Advertisement -

இந்தியர்களுக்கான வெற்றி:

“பாகிஸ்தான் நன்றாக பந்து வீசினர். அவர்கள் வேகத்தை கலக்கி போட்டார்கள். நான் நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு அமைதியாக விளையாட முயற்சித்தேன். சாம்சன் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அழுத்தத்தின் கீழ் துபே பேட்டிங் செய்த விதம் உதவிகரமாக இருந்தது. அது நம்முடைய நாட்டுக்கு முக்கியமானதாகவும் அமைந்தது. நாங்கள் அனைத்து இடங்களிலும் விளையாடத் தயாராக இருக்கிறோம்”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு கோப்பை வழங்காமல் எடுத்துச் சென்ற பாக் வாரிய தலைவர்.. சூரியகுமார் படை மாஸ் பதிலடி

“நீங்கள் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யும் வகையில் வளைவுத்தன்மையுடன் இருக்க வேண்டும். என்னுடைய ஆட்டத்திற்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். பிட்ச் ஸ்லோவாக இருக்கும் போது எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி கௌதம் கம்பீர் சாரிடம் பேசியுள்ளேன். அந்த சூழ்நிலைகளில் அசத்துவதற்காக நான் கடினமாகவும் உழைத்துள்ளேன். இது என்னுடைய வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்களில் ஒன்று. இது அனைத்து இந்தியர்களுக்குமானது” என்று கூறினார்.

Advertisement