சர்வதேச டி20 அரங்கில் இரண்டாவது அணியாக இந்திய அணி நிகழ்த்திய அபார சாதனை – விவரம் இதோ

IND vs SL
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் 28-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ள வேளையில் இந்த தொடரின் கடைசி போட்டியானது நேற்று அதே துபாய் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களையும், திலக் வர்மா 49 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியும் இந்திய அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு சரியாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக போட்டி சமனில் முடிந்தது. அதன்பின்னர் சூப்பர் ஓவர் ஆட்டம் நடைபெற்று அதில் இலங்கை அணி 2 ரன்கள் மட்டுமே குவிக்க இந்தியா 2 ரன்களை குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்களையும், குசால் பெரேரா 58 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது அணியாக ஒரு மாபெரும் சாதனையை நியூசிலாந்து அணியுடன் இணைந்து இந்திய அணி பகிர்ந்து கொண்டுள்ளது. அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக பாகிஸ்தான் அணி முதலிடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக 49 போட்டிகளில் விளையாடி 24 வெற்றிகளை பெற்றுள்ளது. அதற்கடுத்து நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 49 போட்டிகளில் விளையாடி 23 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : இன்னும் 11 ரன்கள் போதும்.. விராட் கோலியின் சாதனையை தகர்த்து வரலாறு படைக்கப்போகும் – அபிஷேக் சர்மா

இவ்வேளையில் தற்போது இந்திய அணியும் இலங்கை அணிக்கு எதிராக 33 போட்டிகளில் விளையாடி அதில் 23 வெற்றிகளை பெற்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற இரண்டாவது அணியாக இந்திய அணியும் நியூசிலாந்து அணியினை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement