ஜஸ்ப்ரீத் பும்ரா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? – வெளியான முக்கிய அப்டேட்

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தனது உடற்தகுதியை கருத்தில் கொண்டும், பணிச்சுமையை கருத்தில் கொண்டும் முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அவர் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி இருந்தார்.

ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? :

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் அவர் லீக் சுற்று போட்டிகளின் போது முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பின்னர் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஓமன் அணிக்கு எதிராக ஓய்வெடுத்துக் கொண்டார்.

- Advertisement -

அதன்பின்னர் தற்போது சூப்பர் போர் சுற்று ஆட்டத்தில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடர் முடிந்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறயிருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

ஏனெனில் கடந்த சில மாதங்களாகவே ஜஸ்ப்ரீத் பும்ரா தொடர்ச்சியாக விளையாடி வருவதால் அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது ஓய்வு எடுத்துக் கொள்வாரோ என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வெளியாகிய முக்கிய அப்டேட்டின் படி :

- Advertisement -

ஜஸ்ப்ரீத் பும்ரா நல்ல உடற்தகுதியுடன் இருப்பதினால் தன்னை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யும் படியும் தான் அந்த தொடரில் விளையாட தயாராக இருப்பதாகவும் தேர்வுக்குழுவினரிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 4 சுற்றுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

இதன் காரணமாக நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறுவார் என்றே தெரிகிறது. ஒருவேளை அவருக்கு நிர்வாகம் ஓய்வு கொடுக்க வழங்கினால் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வினை வழங்கி விட்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement