விராட் கோலி உசுப்பேற்றி விட்டதால் 2015இல் தடை பெற்றேன்.. இலங்கையுடன் மோதியது பற்றி இஷாந்த்

Ishant Sharma
- Advertisement -

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா இந்தியாவுக்காக 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2014 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவர் இந்தியா வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது. அப்படிப்பட்ட இஷாந்த் சர்மா 2015 இலங்கை தொடரில் விளையாட தடை பெற்றார்.

ஆம் தோனி ஓய்வுக்குப் பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் அத்தொடரில் விளையாடிய இந்தியா 1 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது. ஆனால் 3வது போட்டியில் தமிக்கா பிரசாத், தினேஷ் சண்டிமால் போன்ற இலங்கை வீரர்களுடன் இஷாந்த் சர்மா மோதலில் ஈடுபட்டார். அதனால் இஷாந்த் சர்மா, சண்டிமல் ஆகியோருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்த ஐசிசி லஹிரு த்ரிமன்னே, பிரசாத் ஆகியோருக்கு 50% போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்தது.

- Advertisement -

உசுப்பேற்றிய விராட் கோலி:

இந்நிலையில் அப்போட்டியில் விராட் கோலி உசுப்பேற்றியதால் கோபமடைந்த தாம் இலங்கை வீரர்களுடன் மோதி தடையைப் பெற்றதாக இஷாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது 2015 இலங்கை டெஸ்ட் தொடரில் நடைபெற்றது. தமிக்கா பிரசாத் என் மேலே பவுன்சர்களை போட்டார். அப்போது சிங்கிள் எடுத்த நான் “நீங்கள் என்னுடைய தலையை அடிக்க முடியாத அளவுக்கு மெதுவாக பவுலிங் செய்கிறீர்கள்” என்று அவரிடம் சொன்னேன்”

“அங்கே தான் அனைத்தும் துவங்கியது. அப்போதிலிருந்து நாங்கள் முன்னும் பின்னமாக செயல்பட்டோம். அப்போது திடீரென தேர்ட்மேன் பகுதியிலிருந்து வந்த தினேஷ் சண்டிமால் முழங்கையால் என் மேலே மோதினார். அந்த சூட்டில் அஸ்வின் அவுட்டானதால் நான் பெவிலியனுக்கு ஓடினேன். ஏனெனில் என்னுடைய காலணிகளை நான் மாற்ற வேண்டியிருந்தது”

- Advertisement -

தடை பெற்ற இஷாந்த்:

“அதை மாற்றிக் கொண்டிக்கும் போது திடீரென ரவி சாஸ்திரி மற்றும் இலங்கை அணியின் மேனேஜர் பெவிலியனை விட்டு செல்வதை பார்த்தேன். அவர்கள் நானும் பிரசாத்தும் சண்டையிட்டதாக நினைத்தனர். அதே சமயம் பிரசாத் என்னை பின்தொடர்ந்து இந்திய அணியின் பெவிலியனுக்குள் வந்தார். பொதுவாக என்னை எப்படி கோபப்படுத்துவது என்பது விராட் கோலிக்கு தெரியும்”

இதையும் படிங்க: அந்த 2 மேட்ச் போதும்.. இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் ஆசியக் கோப்பையை தூக்கும்.. பாக் வீரர் பேட்டி

“அப்படிப்பட்ட அவர் “பிரசாத் உன்னை அடிக்க வருகிறார், அவரை நீ ஏன் எதுவும் செய்யவில்லை?” என்று என்னிடம் சொன்னார். அத்துடன் சண்டிமல் முழங்கையால் என்னை தாக்கும் வீடியோவையும் பார்க்க வைத்தனர். அதனால் நான் கோபமடைந்தேன். அந்த சமயத்தில் ஏற்கனவே என்னுடைய சம்பளம் கழிக்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையில் கோபத்துடன் 3 இலங்கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய நான் அவர்களுடைய முகத்துக்கு முன்னே கொண்டாடினேன். அதனால் தடைப்பெற்றேன்” என்று கூறினார்.

Advertisement