ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய அஷ்வின் அடுத்ததாக விளையாட இருக்கும் 2 தொடர்கள் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 106 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த அவர் 221 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் விளையாடியிருந்தார்.

2 வெளிநாட்டு தொடர்களில் விளையாடும் ரவிச்சந்திரன் அஷ்வின் :

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் அண்மையில் ஓய்வை அறிவித்ததால் இனி வெளிநாடுகளில் நடைபெற இருக்கும் டி20 தொடர்களில் விளையாடி தனது அடுத்த கட்டப் பயணத்தை தொடரப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் ஒட்டுமொத்தமாக இந்திய கிரிக்கெட்டில் இருந்து வெளியேறிய அஷ்வின் அடுத்ததாக இரண்டு பெரிய வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டு தரும் நடைபெற்று வரும் சர்வதேச லீக் டி20 ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

எதிர்வரும் ஐ.எல்.டி டி20 தொடரானது டிசம்பர் 2-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான ஏலத்தில் மிகப்பெரிய தொகையை அவர் முன்னிறுத்தி தனது பெயரை பதிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த தொடரின் பிரபலத்திற்காக அனைத்து அணிகளுமே அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

- Advertisement -

அதேபோன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பிக்பேஷ் தொடரிலும் அஸ்வின் விளையாடுவதற்காக தனது பெயரை பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்காக தனது பெயரை அஸ்வின் பதிவு செய்யும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க சிட்னி தண்டர்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் ஆகிய அணிகள் ஆர்வம் காட்டுகின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : எதையும் சாதிக்கப்போறது இல்ல.. சஞ்சு சாம்சன் விளையாட வேண்டிய இடம் இதுதான் – வாசிம் ஜாபர்

இதனால் ஐஎல்டி டி20 தொடர் மற்றும் பிபிஎல் தொடர் என இரண்டிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக அவர் தினேஷ் தலைமையில் 6 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறார்.

Advertisement